இன்று சனிக்கிழமையுடன் கூடிய ஆடி மாத தேய்பிறை ஏகாதசி அற்புதமான இந்த நாளை தவிர விடாமல் பெருமாளுக்குரிய இந்த பொருளை பணப்பெட்டியில் வைத்து விடுங்கள். பணத்திற்கு என்றென்றைக்கும் பஞ்சமே வராது.

perumal cash
- Advertisement -

நம்முடைய சாஸ்திரத்தில் ஒவ்வொரு நாளும், தேதியும், மாதமும், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது போல திதிகளிலும் சில திதிகள் வழிபாட்டிற்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது. அப்படியான ஒரு திதி தான் இந்த ஏகாதசி திதி. இந்த ஏகாதசி திதியில் நாம் எந்த வழிபாடு செய்தால் நம்முடைய செல்வ வளத்தை மேலும் பெருக்கிக் கொள்ளலாம் என்பது குறித்த தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் செல்வம் பெருக தேய்பிறை ஏகாதசி வழிபாடு
இந்த ஏகாதசி திதி பெருமாளுக்கே உரியதாக சொல்லப்படுகிறது. அதுவும் சனிக்கிழமையில் இந்த திதி வந்திருக்கிறது. பொதுவாகவே சனிக்கிழமை பெருமாளின் வழிபாட்டிற்கு உரியது, அந்த நாளில் வந்திருக்கக் கூடிய இந்த திதி மேலும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆடி மாதம் அம்மன்களுக்கே உரிய சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆடி மாதத்தில் வரும் ஏகாதசியானது மகாலட்சுமி தாயாருக்கு உரியதாக கருதப்படுகிறது. இவை இரண்டும் ஒரு சேர வந்திருப்பதால் இந்த நாளை தவறாமல் நம்முடைய வழிபாடு நாளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை இன்று நாள் முழுவதும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இன்றைய தினத்தில் நம் வீட்டில் உள்ள பெருமாள் அல்லது மகாலட்சுமி தாயார் படத்தை சுத்தமாக துடைத்து சந்தனம் மஞ்சள் இரண்டையும் குழைத்து பொட்டு வைத்து அதில் குங்கும பொட்டு வைக்க வேண்டும். இப்போது பெருமாள் படத்திற்கு துளசியினால் ஆன மாலையை கட்டி போட வேண்டும். உங்க வீட்டில் மகாலட்சுமி தாயாரின் படம் தான் உள்ளது என்றால் அவருக்கு மல்லிகை மலரால் மாலை சாற்றி வைத்து விடுங்கள். அதிலும் கொஞ்சம் துளசி இலையை மறக்காமல் வைத்து விடுங்கள்.

அதன் பிறகு பெருமாளுக்கு நெய்வேத்தியம் படைப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக இவருக்கு பானகம் செய்து வைத்தாலே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அந்த பானகத்திலும் சிறிது துளசி இலையை சேர்த்துக் கொள்ளுங்கள். இது எல்லாம் செய்த பிறகு படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது நாம் பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்ய வேண்டும். அதற்கு துளசியை ஒவ்வொன்றாக கையில் எடுத்து பெருமாள் படத்திற்கு முன்பாக அவருடைய நாம அர்ச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை சொல்லி போட வேண்டும். இப்படி நீங்கள் எந்த அர்ச்சனை செய்தாலும் 54, 108 என்ற கணக்கின்படி செய்து கொள்ளுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு தீபாராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இந்த பூஜையை செய்யும் பொழுது நிச்சயமாக நீங்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கும் தீபம் ஏற்றி அவரை வழிபட வேண்டும். ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபட்ட பிறகு பெருமாளுக்கு பூஜை செய்த இந்த துளசியை எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதே போல் உங்கள் மணி பரிசிலும் இந்த துளசியை எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். செல்வத்திற்கு அதிபதியான பெருமாள் மகாலட்சுமி தாயார் இருவரையும் இணைத்து வழிபடக்கூடிய இந்த நாளில் வழிபட்ட இந்த துளசி உங்களிடம் இருந்தால் பணம் உங்களிடம் சேர்வதற்கான வாய்ப்புகள் பெருகும். இந்த வழிபாட்டை வீட்டில் செய்ய முடியாதவர்கள் ஆலயத்திற்கு செல்லும் போது துளசி மாலையை பெருமாள் வாங்கி கொடுத்து அவருக்கு சாற்று சொல்லிய பிறகு அதிலிருந்து சிறிதளவு துளசியை வீட்டிற்கு கொண்டு வந்து இதே போல் பணப்பெட்டியிலும் உங்கள் பரிசிலும் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த பரிகாரத்தை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து அடமானத்தில் இருக்கும் நகைகள் அனைத்தும் வீடு திரும்பும்.

செல்வ வளத்தை பெருக்கக் கூடிய இந்த வழிபாட்டை இன்றைய நாள் தவறாமல் கடைப்பிடித்து பெருமாளின் அனுகிரகத்தை முழுவதுமாக பெறலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -