வீட்டில் சுபீட்சம் குறையாமல் நிறைந்து இருக்க செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் என்ன தெரியுமா?

soundhariya-lahari-pray
- Advertisement -

ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தெய்வீக சிந்தனையுடன் இருக்கும் பொழுது அந்த வீட்டில் இயல்பாகவே சுபீட்சம் உண்டாகிறது. நீங்கள் தினமும் விளக்கு ஏற்றி சிறிய நைவேத்தியம் படைத்து குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் திருநீறு அல்லது குங்குமம் இட்டு வழி அனுப்பி வைத்தால் அந்த இல்லத்தில் அள்ள அள்ள குறையாமல் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்குமாம். இப்படி நம் வீட்டில் சுபீட்சம் நிலைத்து இருக்க செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

poojai

முதலாவதாக நாம் பூஜைகள் செய்யும் பொழுது நம்முடன் குழந்தைகளையும் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் பூஜை, புனஸ்காரங்களை அந்த குழந்தை பார்த்துக் கொண்டு இருந்தால், அதற்கும் தெய்வீக நம்பிக்கையும் நற் சிந்தனையும் அதிகரிக்கத் துவங்கும். நீங்கள் செய்வதை பார்த்து கொண்டிருக்கும் பொழுது, அவர்களுக்கும் சிறு சிறு வேலைகளைக் கொடுத்து செய்ய சொல்ல வேண்டும்.

- Advertisement -

சிறிய குழந்தையோ அல்லது பெரியவர்களோ யாராக இருந்தாலும், பள்ளிக்கூடம், வேலைக்கு செல்லும் எந்த குழந்தையாக இருந்தாலும், முதலில் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு பூஜை அறையில் அல்லது சுவாமி படத்திற்கு முன்பாக விழுந்து கும்பிட சொல்ல வேண்டும். ஆண் குழந்தைகள் எட்டு அங்கங்களும் தரையில் படும்படி நமஸ்காரமும், பெண் குழந்தைகள் ஐந்து அங்கங்களும் தரையில் படும்படி நமஸ்காரமும் செய்து கொண்டு பின்னர் விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டு காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி நீங்கள் அவர்களுக்கு பழக்கப்படுத்தி விட்டால் அந்த வீட்டில் சுபீட்சம் நிலைத்து நிற்கும்.

poojai

தூப, தீப, நைவேத்திய, அர்ச்சனை காண்பிக்க வேண்டும் என்பது மரபு எனவே காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு முதலில் பூஜை அறையில் தூப சாம்பிராணி போட்டு காண்பிக்க வேண்டும். அதன் பிறகு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு தீபம் ஏற்ற வேண்டும். நைவேத்தியமாக உங்களிடம் எதுவும் இல்லை என்றாலும் கற்கண்டு, பேரீச்சம்பழம், திராட்சை போன்ற ஏதாவது ஒன்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். நைவேத்திய பொருளை சுற்றி உங்கள் கைகளால் தண்ணீரை விட்டு சுவாமிக்கு நைவேத்தியத்தை எடுத்துக் கொள்ளுமாறு மனதார பிரார்த்திக்க வேண்டும். நீங்கள் சாப்பிடுவது போல இறைவனுக்கும் நீங்கள் தினமும் இது போல் ஏதாவது ஒரு பொருளை நைவேத்யம் வைப்பதன் மூலம் வீட்டில் சுபீட்சம் எப்பொழுதும் நிறைந்திருக்கும்.

- Advertisement -

அதே போல உங்கள் வீட்டில் எப்பொழுதும் பொரிகடலை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நவதானியங்களை வைத்துக் கொள்ளுங்கள். பூஜை, புனஸ்காரங்கள் எல்லாம் முடித்து வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்களை வேலைக்கு அனுப்பி விட்டு பெண்கள் உங்கள் கைகளால் பொரிகடலையை காக்கை, குருவிகளுக்கு தானம் கொடுங்கள். பொரிகடலை இல்லை என்றாலும் நவதானியங்களை பறவைகளுக்கு தானம் கொடுத்து வாருங்கள்.

birds

இது போல் நீங்கள் செய்வதால் உங்களுக்கு இருக்கும் நவகிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகி வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் குறைய துவங்கும். இதன் மூலமும் உங்கள் வீட்டில் சுபீட்சம் எப்பொழுதும் நிலைத்து நிற்கும். அதே போல ஐந்தறிவுள்ள விலங்குகளுக்கும் நீங்கள் உணவு கொடுப்பதன் மூலம் சுபிட்சத்தை பெருக்கிக் கொள்ளலாம். பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது, நாய் போன்ற விலங்குகளுக்கு சாதம் வைப்பது போன்ற புண்ணியங்களை செய்து கொள்ள வேண்டும். இந்த ஐந்து விஷயங்களை நீங்கள் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உங்கள் இல்லத்தில் சுபீட்சம் குறையாமல் நிலைத்து நிற்கும்.

- Advertisement -