அம்மனை நம் வீட்டிற்கு அழைத்து வந்து தெய்வசக்தியை நமது வீட்டில் குடிகொள்ளச் செய்ய வாரத்தில் ஒரே ஒரு நாள் இதை மட்டும் செய்தாலே போதும். நமது பிரச்சனைகள் எல்லாம் தீர வழி பிறக்கும்.

dheive kadacham pera
- Advertisement -

வெள்ளிக்கிழமை இதை செய்தால் அம்பிகை நம் வீட்டிற்குள் வருவாள்.
நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டில் தெய்வ கடாட்சம் நிலைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். தெய்வங்கள் நம் வீட்டிற்குள் இருந்தால், நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும், செல்வ செழிப்பு ஏற்படும், நன்மைகள் உண்டாகும் என்பது நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட தெய்வ கடாச்சத்தை வீட்டில் பெறுவதற்குரிய ஒரு எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் அனைத்து தெய்வங்களையும் வீட்டிற்குள் நிலைக்க செய்யமுடியாது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான பரிகாரத்தை தாந்திரீக முறையில் மேற்கொள்வன்தான் மூலம் அந்த தெய்வத்தை மட்டும் வீட்டில் நிலைக்கச்செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் அம்பாளை வீட்டிற்குள் வரவழைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

அம்மனுக்கு உகந்த கிழமையாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை. இந்த வெள்ளிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்‌. பிறகு வீட்டு வாசலில் கோலம் போட்டு, மாவிலைத் தோரணத்தை கட்ட வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூ போட்டு, விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு விளக்கேற்றும் போது நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைத்தாலே போதும்.

இவ்வாறு செய்த பிறகு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். செல்லும்போது நான்கு எலுமிச்சை கனியை எடுத்துச் செல்ல வேண்டும். கோவிலுக்கு சென்ற உடன் மூன்று கனிகளை எடுத்து அம்மனை நன்றாக வேண்டிக் கொண்டு, திரிசூலத்தில் குத்த வேண்டும். பிறகு நேராக அம்மனிடம் சென்று ஒரு கனியை அம்மன் காலடியில் வைக்குமாறு சொல்லிவிட்டு, அம்மனை பதினோரு முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு வலம் வரும்பொழுது நம்முடைய பிரச்சினைகளை கூறிக் கொண்டே வலம் வர வேண்டும். வலம் வந்த பிறகு அம்மனின் காலடியில் உள்ள கனியை பெண்கள் தங்கள் முந்தானையில் வாங்கிக் கொள்ள வேண்டும். வாங்கிய பிறகு நேராக வீட்டிற்கு வந்து பூஜை அறையில் இந்த கனியை வைக்க வேண்டும்.

இவ்வாறு பதினொரு வாரங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். பதினோராவது வாரத்தில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, பொங்கலிட்டு வழிபட்டால் அது மேலும் சிறப்பை தரும். இதில் முதல் வாரம் வாங்கிய கனியை அடுத்த வாரம் ஓடுகின்ற நீரிலோ அல்லது நம் வீட்டின் பூந்தொட்டியிலோ போடலாம். முக்கியமானது யாரின் காலிலும் படக்கூடாது. அல்லது ஒரு கவரில் சேகரித்து வைத்து மொத்தமாக ஓடுகிற நீரிலும் போடலாம்.

இவ்வாறு நாம் ஒவ்வொரு வாரமும் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக அம்மனை வீட்டில் நிலைக்க செய்யலாம். வீட்டில் தெய்வ கடாச்சம் இருப்பதை நம்மால் நிச்சயம் உணர முடியும். அப்படி உணரும் பட்சத்தில் நாம் தொடர்ந்து சுத்தபத்தமாக இருப்பது அவசியம். இல்லை என்றால் தெய்வசக்தி வீட்டில் நிலைக்காது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

தெய்வ சக்தி நம் வீட்டில் குடிகொள்ளும் பட்சத்தில் நமது பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைந்துகொண்டே இருக்கும். வீட்டில் சந்தோஷமும், மன நிம்மதியும் பெருகிக்கொண்டே இருக்கும்.

- Advertisement -