இன்றைக்கு என்ன அப்படி அதிசயம் வாய்ந்த நாள். இன்று அஜா ஏகாதேசி, இழந்ததையெல்லாம் திரும்பவும் மீட்டு தரக்கூடிய ஏகாதசி. பாவத்தை எல்லாம் நம்மிடம் இருந்து நீக்கக்கூடிய ஏகாதசி திதி எந்த ஜென்மத்திலோ நாம் செய்த பாவம்தான், இந்த பிறவியில் நம்மை மனிதனாக பிறக்கச் செய்து, இத்தனை கஷ்டங்களை கொடுக்கிறது.
அந்த பாவம் நீங்க இன்றைய நாள் அனைவரும் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். அது மட்டுமல்ல இன்று திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்திருக்கிறது. சிவபெருமானையும் சேர்த்து வழிபாடு செய்யுங்கள். இந்த ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி திதி விரதம் இருந்துதான் அரிச்சந்திர மகாராஜா, தான் இழந்த நாடு, சொத்து சுகம் செல்வம் எல்லாவற்றையும் திரும்பவும் மீட்டு எடுத்ததாக ஒரு புராணக் கதை சொல்லப்பட்டுள்ளது.
ஆகவே இன்று நீங்கள் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி இலைகளை வாங்கி கொடுத்து வழிபாடு செய்து தயாரையும் வழிபாடு செய்து, பெருமாள் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து நீங்கள் இழந்த செல்வத்தையும் திரும்பவும் மீட்டு தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் இருந்ததை எல்லாம் அந்த பெருமாளும் மகாலட்சுமியும் உங்களுக்கு மீட்டுக் கொடுத்து விடுவார்கள். இது முதல் ஆன்மீகம் வழிபாடு.
வறுமை நீங்க ஏகாதசி வழிபாடு
வியாழக்கிழமையோடு சேர்ந்து இந்த ஏகாதசி திதி வந்திருக்கிறது. இதை குபேர ஏகாதசி என்றும் சொல்கிறார்கள். இன்று ஒரு தாந்திரீக பரிகாரத்தை நீங்கள் செய்தீர்கள் என்றால், நிச்சயம் வாழ்க்கையில் ஓஹோ என பணத்தை சம்பாதிக்க முடியும். அதற்கு நமக்குத் தேவை வரகொத்தமல்லி. இது எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கும். தனியா என்று கூட சில பேர் இதை சொல்லுவார்கள். இருபது ரூபாய் கொடுத்தாலும் இந்த பொருளை நீங்கள் வாங்கலாம்.
அந்த பொருளை வாங்கி வந்து ஒரு தாம்பூல தட்டில் கொட்டி பரப்பி பூஜை அறையில் வைத்து விடுங்கள். வீட்டில் இருக்கும் வர மல்லியை பயன்படுத்தாதீங்க. காசு கொடுத்து இன்று புதுசாக வர மல்லி வாங்குவது தான் சிறப்பு. பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். மகாலட்சுமியின் பீஜ மந்திரம் ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை அந்த வர மல்லியின் மேலே எழுத வேண்டும். வரமல்லியின் மேல் உங்கள் வலது கை ஆள்காட்டி விரலைக் கொண்டு ஸ்ரீம் என்ற வார்த்தையை எழுதி உங்களுடைய வேண்டுதலை சொல்லுங்கள். எனக்கு இந்த தேவைக்கு, இவ்வளவு பணம் வேண்டும்.
சீக்கிரம் பணம் சம்பாதித்து நான் செல்வந்தன் ஆகி கடனை எல்லாம் அடைக்க வேண்டும். நிம்மதியாக வாழ வேண்டும், இப்படி என்ன கோரிக்கை இருந்தாலும் நீங்கள் பெருமாளிடம் வைக்கலாம். மனம் உருகி பிரார்த்தனை செய்து பெருமாளுக்கு உங்களால் முடிந்த நெய்வேதியம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த வர கொத்தமல்லி நிறைய இருக்கும்.
இதையும் படிக்கலாமே: திருஷ்டி நீங்க கண் திருஷ்டி பிள்ளையார் வழிபாடு
20 ரூபாய்க்கு வாங்கினாலும் ஒரு தட்டு நிறைய கொட்டி பரப்பி வைத்திருப்பீர்கள். அதிலிருந்து ஒரு கைப்பிடி மல்லி விதைகளை மட்டும் எடுத்து ஒரு வெள்ளை துணியில் வைத்து மூட்டையாக கட்டி பணம் வைக்கும் பெட்டியில், பீரோவில், நகை வைக்கும் இடத்தில் வைக்கலாம். மீதம் இருக்கக்கூடிய வரமல்லிகளை எடுத்து நீங்கள் சமையலுக்கு தாராளமாக பயன்படுத்தலாம். அதை வீணாக்காதீர்கள். இந்த வர மல்லி போட்டு சமைத்த உணவை குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இதை சாப்பிடவும். இன்றைய தினம் இந்த வரமல்லி வழிபாடு நிச்சயம் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் வறட்சியை நீக்கும் வறுமையை நீக்கும்.