இனி பெடிக்யூர் மெனிக்யூர் செய்ய பார்லர் சென்று ஆயிரம் ஆயிரமாக செலவு செய்ய வேண்டாம். ஒரு ரூபாய் செலவு செய்தால் போதும் பார்லர் சென்று வந்ததை விட இதை அழகாக நாமே செய்து கொள்ளலாம்.

pedicure medicure
- Advertisement -

இப்போதெல்லாம் இந்த பெடிக்யூர், மெனிக்யூர் என்று கை கால்களை அழகுப்படுத்திக் கொள்ளும் முறை பரவலாக பரவி வருகிறது. இதை அழகு நிலையம் சென்று செய்யும் போது ஆயிர கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். இதை எல்லோராலும் அதிக பணம் கொடுத்து செய்ய முடியாது அல்லவா. இந்த அழகு குறிப்பு பதிவில் பெடிக்யூர், மெடிக்யூரை நாம் வீட்டில் எவ்வளவு சுலபமாக அதே நேரத்தில் அழகாக செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வீட்டிலிருந்து பெடிக்யூர் மெடிக்கியூர் செய்யும் முறை:
முதலில் நம்முடைய பாதங்கள் மூழ்கும் வரையான பாத்திரத்தை எடுத்து அதில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக கல் உப்பையும், இரண்டு சொட்டு எலுமிச்சை சாறையும் கலந்த பிறகு பாதங்களை ஐந்து நிமிடம் வரை வைத்து எடுத்து ஒரு மெலிதான காட்டன் துணியை வைத்து சுத்தமாக துடைத்து விடுங்கள். இதே போல கைகளையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு சிறிய பௌலில் ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட்டில் இருந்து ஷாம்புவை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு, அரை எலுமிச்சை பழத்தின் சாறை மட்டும் சேர்த்து நன்றாக கலந்தால் இது ஒரு நல்ல பேஸ்ட் பதத்திற்கு கிடைத்து விடும்.

இதை ஒரு பிரஷ் வைத்து உங்கள் கால்கள் கைகள் இரண்டிலும் நன்றாக தேய்த்து பின்பு நாம் எலுமிச்சை பழம் பிழிந்து பிறகு இருக்கும் தோலை வைத்து லேசாக ஐந்து நிமிடம் வரை அப்படியே மசாஜ் செய்து கொடுங்கள். இதன் பிறகு 5 நிமிடம் இந்த பேக் உங்கள் கைகளில் அப்படியே ஊற விடுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரே சிறிய உருளைக்கிழங்கு துண்டை எடுத்து அதை வைத்து உங்கள் கைகளும் கால்களும் மீண்டும் ஒருமுறை நன்றாக வட்ட வடிவில் மசாஜ் செய்து கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் மேல் தோள்களில் இருக்கும் இறந்த செல்கள் எல்லாம் வெளியேறுவதுடன், ரத்த ஓட்டமும் சீராக இருந்து நிறம் கூடி அழகாக இருக்கும்.

இவையெல்லாம் செய்த பிறகு சுத்தமான தண்ணீர் வைத்து கை கால்களை துடைத்த பிறகு மெல்லிய துணி வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் நகங்களை எல்லாம் அழகாக சேப் செய்து விருப்பமான நைல் பாலிஷ் கலரை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பார்லர் சென்று செய்தால் எந்த அளவிற்கு உங்களுடைய கை, கால்கள் எல்லாம் பளிச்சென்று இருக்குமோ அதைவிட ஒரு படி மேலே உங்களுடைய கை கால்களின் அழகு கூடியிருக்கும்.

இதையும் படிக்கலாமே: அட இது செம ஐடியாவா இருக்கே! முடி கருப்பாக வளரவும் அடர்த்தியாக வளரவும், நீளமாக வளரவும் ஒரே ஒரு பேக் போதுமா? ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க போரோம்.

வீட்டிலேயே அதிக செலவு இல்லாமல் செய்யக் கூடிய இந்த பெடிக்யூர், மெனிக்யூர் முறை உங்களுக்கும் பிடித்திருந்தால் நிச்சயமாக நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இனி பார்லர் பக்கமே போகாமல் இந்த முறையை தான் டிரை பண்ணுவீங்க.

- Advertisement -