செல்வம் சேரவும், நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்வு பெறவும் இந்த ஒரு கனியை தானமாக கொடுத்து பாருங்கள்

nellikai
- Advertisement -

அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை நமக்கு வேண்டியவை கிடைப்பதற்காகவும், நீண்ட நாள் ஆசை நிறைவேறுவதற்காகவும், ஏதேனும் ஒரு விஷயத்திற்கு தடைகள் இருந்தால் அந்த தடைகள் நீங்குவதற்காகவும் இறைவனிடம் மன்றாடி வேண்டிக் கொள்கிறோம். அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக நான் இதைச் செய்கிறேன் என்று மொட்டை அடித்துக்கொள்வது, தானங்கள் செய்வது, பொங்கல் வைப்பது போன்ற பரிகாரங்களையும் செய்து வருகின்றோம். அவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கும், வீட்டில் பணம் அதிகரிப்பதற்கும் இந்த ஒரு கனியை தானமாக கொடுப்பதன் மூலம் சிறந்த பலனைப் பெறமுடியும். வாருங்கள் இந்த கனியின் சிறப்புகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

sarkarai-pongal4

ராஜகனி என்று அழைக்கப்படும் ஒரு கனி உள்ளது. அது என்னவென்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுதான் எலுமிச்சை பழம். இந்த எலுமிச்சை பழம் ஆன்மீகத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. அதிகமாக அனைத்து பூஜைகளிலும், கோவில்களிலும் இறைவனுக்கான விசேஷங்களில் இந்த எலுமிச்சை பழம் இடம்பெறாமல் இருப்பதில்லை. இந்த எலுமிச்சை பழத்திற்கு நாட்டுகனி என்று மற்றொரு பெயரும் இருக்கிறது.

- Advertisement -

அதுபோல காட்டுகனி என்று அழைக்கப்படும் பெரிய நெல்லிக்காயும் ஆன்மீகத்தில் சிறந்த பலனை அளிக்கிறது. காட்டிற்குள் வாழ்ந்த முனிவர்கள் இந்த நெல்லிக்காயை உண்டு தான் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தனர். தினமும் ஒரு நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது. இந்த நெல்லிகாய் இறுதிவரை காயாக தான் இருக்கிறது. எனினும் இதற்கு நெல்லிக்கனி என்ற பெயரும் இருக்கிறது. இதுவே இதன் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

எலுமிச்சை

முந்தைய காலத்தில் ஏழை குடும்பம் ஒன்று இருந்துள்ளது. அந்த குடும்பத்தில் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிடைக்கும் உணவை பகிர்ந்து தான் சாப்பிடுவார்கள். இந்த உணவு அவர்களின் ஒரு வேளை பசியைக் கூட தீர்க்கின்ற அளவிற்கு போதுமானதாக இருந்ததில்லை.

- Advertisement -

இந்த ஏழைக் குடும்பம் ஒரு முறை பூஜை செய்தல் நெல்லிக்கனிகளை மற்றவருக்கு தானமாக கொடுத்துள்ளனர். இவர்களுக்கு இல்லாத நிலையிலும் மற்றவர்களுக்கு தானம் கொடுத்ததால் இறைவனின் அருள் கிடைத்து அவர்களின் இல்லத்தில் தங்க நெல்லிக்காய் மழையாக பொழிந்தது.

Nellikai benefits in tamil

எனவே வெள்ளிக்கிழமை தோறும் 11, 21 என்ற எண்ணிக்கையில் நெல்லிக்காய்களை வாங்கிக்கொண்டு கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பின்னர் அதனை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து விட்டு, மீண்டும் இந்த நெல்லிகாய்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும்.

- Advertisement -