வீட்டில் எந்த பொருட்கள் அதிகமாக இருக்க வேண்டும் தெரியுமா? இந்தப் பொருட்கள் இருந்தால் குரு அருள் கிடைக்குமாம்!

- Advertisement -

வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு தன்மை உண்டு. அது எதனால் ஆனது? எப்படிப்பட்டது? என்பதை பொறுத்தும் பலன்கள் உண்டு. ஒவ்வொரு உலோகங்களும், ஒவ்வொரு விதமான கிரகத்துடன் தொடர்பு உடையது ஆகும் என்பதால் நீங்கள் வாங்கி வைக்கக் கூடிய பொருள் எந்த உலோகத்தால் ஆனது? என்பதும் இங்கு முக்கியமாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் குருவருள் கிடைக்க, நம் வீட்டில் அதிகமான பொருட்கள் எதனால் ஆனதாக இருக்க வேண்டும்? அது ஏன்? என்பது போன்ற சுவாரசியமான ஜோதிட குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இரும்பு சனி பகவானுக்கு உரியது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினால் ஆன பொருட்கள் வீட்டில் தேவை இல்லாமல் எந்த இடத்திலும் போட்டு வைக்கக் கூடாது. உபயோகமுள்ள இரும்பு பொருட்கள் மற்றும் துருப்பிடிக்காத இரும்பு பொருட்கள் தாராளமாக வைத்து பயன்படுத்தலாம் ஆனால் அனாவசியமாக, கனமான இரும்பு பொருட்களை வீட்டில் வைத்திருப்பது கூடாது. துருப்பிடித்த இரும்பு பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். இது சனி பகவானுடைய காரகத்துவம் பெற்றுள்ளதால் சனியை நம் வீட்டில் நாமே அழைப்பது போன்ற செயலாகும்.

- Advertisement -

துடைப்பம் என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது. அதே போல செருப்பு என்பது சனி பகவானுடைய அம்சமாக கருதப்படுகிறது எனவே செருப்பினை நீங்கள் துடைப்பத்திற்கு அருகில் கண்டிப்பாக வைக்கக் கூடாது. அதே போல நிலை வாசல் என்பது குலதெய்வ வாசம் செய்யும் இடம் ஆகும் எனவே வாசலில் செருப்பை கழட்டி வைப்பதும் கூடாது.

வாசலுக்கு நேரே செருப்பு இருந்தால் சனி பகவான் பார்வை உங்கள் வீட்டை நோக்கி இருக்கும் படியான அமைப்பாகும் என்பதால் வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகளும், பொருளாதார இழப்பும் ஏற்படும். வருமானம் குறைய துவங்கும், மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். உங்கள் ஜாதகத்தில் சனி இருக்கும் அமைப்பை பொறுத்து உங்களுடைய வாழ்க்கையையும் ஆட்டிப்படைக்க கூடிய ஒரு விஷயம் இந்த செருப்பின் அமைப்பாக இருக்கிறது எனவே செருப்பை உரிய இடத்தில் ஓரமாக மட்டுமே நீங்கள் வைக்க வேண்டும். காலை கழுவாமல் உள்ளே போக வேண்டாம். வாசலில், வாசலுக்கு நேரே செருப்பை கழட்டி எறியக் கூடாது.

- Advertisement -

அதே போல வீட்டில் இருக்கும் பொருட்கள் பெரும்பாலானவை மரத்தால் ஆனதாக இருக்க வேண்டும். மரத்தால் ஆன பொருட்களில் குரு பகவான் வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கிறது எனவே குரு வாசம் கிடைக்க வீட்டில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் மரத்தினால் ஆனதாக இருப்பது நல்ல அம்சமாக இருக்கிறது. வெளிநாடுகளில் அங்கிருக்கும் சிதோஷண நிலைக்கு ஏற்ப மரத்தினாலே வீடு கட்டப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். நம்மால் அப்படியெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், வீட்டில் வாங்கக்கூடிய பொருட்கள் இரும்பினால் அல்லாமல் பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் அல்லாமல் மரத்தால் ஆன பொருட்களை வாங்க முயற்சிப்பது அதிர்ஷ்டம் தரக்கூடிய செயலாகும்.

இதையும் படிக்கலாமே:
ராசி கல் மோதிரம் தமிழ் | Rasikal mothiram in Tamil

சமையலுக்கு பயன்படுத்தும் கரண்டிகள், பாத்திரங்களை கூட நீங்கள் தேவைப்படும் அளவிற்கு மரத்தினால் ஆனதாக வைத்துக் கொண்டால் கிரக தோஷங்கள் நீங்கும் மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். சிலர் ஆடம்பரத்திற்காகவும், பகட்டிற்காகவும் பிளாஸ்டிக் தட்டில் சாப்பிடுவது உண்டு. வண்ண பிளாஸ்டிக் தட்டுகளை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். இது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை தரும். உடலுக்கும் நன்மை செய்யாது, தீமை தான் செய்யும்.

- Advertisement -