வீடு எப்போதும் நல்ல நறுமணத்துடன் இருப்பது நமக்கு ஒரு நல்ல நேர்மறை ஆற்றலை கொடுக்கும். வீட்டைச் சுற்றி எப்போதும் இயற்கை மணம் வீசினால் மனம் அமைதியாகவும், நல்ல தெளிவான சிந்தனைகளுடன், உற்சாகமாக இருக்கும். அது மட்டும் இன்றி இப்படி இருக்கும் இடத்தில் தெய்வ கடாட்சமும் நிறைந்திருக்கும். இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் வீட்டை எப்போதும் நறுமணத்துடன் வைத்திருக்க ஒரு புதிய ஐடியாவை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.
இதற்கு முதலில் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து அதை துருவி தூளாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் இந்த மெழுகு தூள் கலந்த கிண்ணத்தை வைத்து டபுள் பாயில் முறையில் மெழுகை உருகி கொள்ளுங்கள்.
அடுத்ததாக உங்கள் வீட்டில் இருக்கும் அகல் விளக்கில் இரண்டு அல்லது மூன்று அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உருக்கி வைத்திருக்கும் மெழுகை ஊற்றிய பின் அதில் விளக்கு திரியை போட்டு விடுங்கள். இதை அப்படியே வைத்தால் சிறிது நேரத்திற்கெல்லாம் மெழுகு அகலில் இறுகி விடும்.
இப்போது ஒரு தட்டில் இந்த அகல் விளக்கு 3 அல்லது 4 வைத்து தீபம் ஏற்றி விடுங்கள். அதன் மேல் அடி பாகம் தட்டையான ஒரு பாத்திரத்தை கவிழ்த்து வைத்து விடுங்கள். இப்பொழுது விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அதன் அனலானது நாம் கவித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் பட்டு பாத்திரம் சூடாக இருக்கும்.
இப்போது அந்த பாத்திரத்தின் மீது ஒரு வெற்றிலையை வைத்து விடுங்கள். அதன் மேல் நாம் தீபம் ஏற்றும் எண்ணெய் தேங்காய் எண்ணெய், நெய் அல்லது உங்களிடம் எந்த எண்ணை இருக்கிறதோ அதில் ஒரு ஸ்பூன் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு சிறிதளவு பச்சை கற்பூரம் ஒரு பிஞ்ச், ஏலக்காய் பவுடர் ஒரு பிஞ்ச், கொஞ்சம் ஜவ்வாது அனைத்தையும் வெற்றிலையில் இருக்கும் எண்ணெயில் கலந்து அப்படியே வைத்து விடுங்கள்.
இது கோவில்களில் வருவது போன்ற நல்ல ஒரு தெய்வீக மணத்தை வீட்டினுள் பரவ செய்யும். இதற்கு நாம் சாதாரண அகல் விளக்கையும் ஏற்றி வைக்கலாம். அப்படி ஏற்றும் போது அகல் விளக்கு சீக்கிரம் எரிந்து முடிந்து விடும். மெழுகு உருகி தீபமாக ஏற்றும் போது அது நீண்ட நேரம் எரியும். இந்த வாசமும் நமக்கு நீண்ட நேரம் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: வாரத்தில் ஒரு நாள் பாத்ரூமை இப்படி சுத்தம் செய்தால் போதும். அடுத்த ஏழு நாட்களுக்கு எந்த துர்நாற்றமும் வீசாது. எந்த கிருமி தொற்றும் ஏற்படாது.
வீட்டில் பூஜை செய்யும் போது அல்லது விசேஷ நாட்களில் கூட இந்த இப்படி ஏற்றி வைத்தால் நாள் முழுவதும் வீடு தெய்வீக மனதுடன் பரவசமாக இருக்கும். இந்த அகல் விளக்கு கொஞ்ச நேரம் இருந்த பிறகு அப்படியே எடுத்து வைத்து விடலாம். மெழுகு உருகி அதிலே இருப்பதால் விளக்குகள் நீண்ட நாட்கள் நமக்கு பயன்படும். இந்த இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.