வாரத்தில் ஒரு நாள் பாத்ரூமை இப்படி சுத்தம் செய்தால் போதும். அடுத்த ஏழு நாட்களுக்கு எந்த துர்நாற்றமும் வீசாது. எந்த கிருமி தொற்றும் ஏற்படாது.

toilet
- Advertisement -

கூடுமானவரை தினம் தோறும் குளியலறையையும், கழிவறையையும் சுத்தம் செய்து விட வேண்டும். அப்போதுதான் வீட்டில் இருப்பவர்களுக்கு கிருமி தொற்று ஏற்படாமல் இருக்கும். அதாவது இன்ஃபெக்ஷன் பாதிப்புகள் ஏற்படாது. இருந்தாலும் உடல்நிலை சரியில்லாதவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என்று, அவசர அவசரமாக ஓடுபவர்களுக்கு தினம் தோறும் வீட்டில் இந்த குளியலறை கழிவறையை சுத்தம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு என்ன செய்வது. வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமையில் குளியலறையை சுத்தம் செய்யும் போது இந்த ஒரு விஷயத்தை பின்பற்றி பாருங்கள். அதோடு மட்டுமல்லாமல் தினம் தினம் குளியலறை கழிவறையை பயன்படுத்திய பின்பு இந்த குறிப்பை பின்பற்றினால் போதும். வாரத்தில் ஏழு நாட்களும் உங்களுடைய பாத்ரூம் சுத்தமாகவும் இருக்கும். அதே சமயம் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும். கிருமி தொற்றும் ஏற்படாது.

குளியலறையை சுத்தம் செய்யும் முறை:
இதற்கு நாம் கையாலேயே ஒரு லிக்விட் தயார் செய்ய வேண்டும். ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் துணி துவைக்கும் லிக்விட் – 2 டேபிள் ஸ்பூன், ஹார்பிக் – 1/4 கப்,  தூள் உப்பு – 4 டேபிள் ஸ்பூன், போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு லிக்விட் நமக்கு தயாராக கிடைத்திருக்கும். ஒரு பிளாஸ்டிக் வாட்டர் கேனில் இந்த லிக்விடை ஊற்றி மூடியில் சின்ன சின்ன ஓட்டைகளை போட்டு பாத்ரூம் முழுவதிலும் ஸ்பிரே செய்துவிட்டு, பத்து நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு துடைப்பம் அல்லது பிரஷ் போட்டு நன்றாக பாத்ரூமை தேய்த்து கழுவி விடுங்கள்.

- Advertisement -

பாத்ரூமை தேய்த்து கழுவி விட்டு இறுதியாக கால் பக்கெட் தண்ணீரில், 2 மூடி டெட்டால் ஊற்றி, பாத்ரூம் முழுவதிலும் ஊற்றி விடுங்கள். இப்படி பாத்ரூமை சுத்தம் செய்தால், உங்களுடைய பாத்ரூமில் இருக்கும் கிருமிகள் அனைத்தும் முழுமையாக அழிந்து விடும். தினமும் குளியலறையையும் கழிவறையையும் பயன்படுத்தி முடித்த பின்பு, பாத்ரூமை விட்டு வெளியில் வரும்போது ஒரு ஜக் தண்ணீரில், ஒரு மூடி டெட்டால் ஊற்றி, பாத்ரூம் டாய்லெட்டில் முழுமையாக ஊற்றிவிட்டு வர வேண்டும்.

வீட்டில் ஐந்து பேர் இருக்கிறீர்கள் என்றால், ஒரு முறை, ஒருவர் பயன்படுத்திய குளியலறை கழிவறையை, இன்னொருவர் பயன்படுத்துவதற்கு முன்பு, டெட்டால் கலந்த தண்ணீரை ஊற்றி விட்டு பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப நல்லது. இன்றைய சூழ்நிலையில் நோய் தொற்று அதிகமாக இருக்கிறது. நோய் தொற்று அதி வேகமாக பரவக்கூடிய இடம் என்று பார்த்தால் அது கழிவறை குளியலறை தான். அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது வீட்டில் இருக்கக்கூடிய பெண்களின் கடமை மட்டுமல்ல.

- Advertisement -

வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் நினைத்தால் தான் வீட்டையும் கழிவறையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வரிசையில் பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்வதில் வீட்டில் இருக்கும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அதிக விலை கொடுத்து டெட்டால் வாங்க முடியாது என்பவர்கள் ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம். அது விலை மலிவு தான் பத்து ரூபாய். ஆனால் அதிலிருந்து அதிகப்படியான நெடி வெளிவரும் ஆகவே குழந்தைகள் முதியவர்கள் உள்ள இடத்தில் அதை பயன்படுத்த முடியாது.

இதையும் படிக்கலாமே: இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சா போதுங்க இந்த கோடை காலத்தை ஈசியா சமாளிச்சிடலாம். அப்படி என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?

எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு மாதத்திற்கு, ஒரு பாட்டில் டெட்டால் வாங்குவது எந்த பிரச்சனையும் இருக்காது. குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் இருக்கக்கூடிய வீட்டில் கழிவறையை மேல் சொன்ன முறைப்படி பயன்படுத்தினால் நோய் தொற்று வராமல் தடுக்க மிக மிக சுலபமான முறையில் இதுவும் ஒன்று. நான் தயார் செய்த லீக்விடில் உப்பு சேர்த்திருப்பதால் கிருமிகள் செத்து மடியும். மேலே சொன்ன பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -