சைவ குருமா இப்படி செய்து பாருங்க. இனி அடிக்கடி இதை செய்துகொண்டே இருப்பீர்கள்.

veg-kurma-potato-pattani_tamil
- Advertisement -

சைவ குருமா செய்வது எப்படி | Saiva kurma seivathu recipe

பலவிதமான வகைகளில் செய்யக்கூடிய இந்த குருமா ரெசிபி பட்டாணி, மூக்கடலை, வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்த்து செய்யும் பொழுது ரொம்பவே ருசி ஆகிறது. மேலும் இதில் சேர்க்கக்கூடிய இன்கிரிடியன்ஸ்இந்த ரெசிபியை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. இரண்டு விசிலில் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என எல்லாவற்றுக்கும் தொட்டுக்க கூடிய ஒரு சுவையான சைவ குருமா ரெசிபி எப்படி செய்யலாம்? என்பதை தொடர்ந்து இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், கல்பாசி ஒன்று, பிரியாணி இலை – ஒன்று, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தக்காளி – இரண்டு, பச்சை பட்டாணி – ஒரு கப், மூக்கடலை – ஒரு கப், உருளைக்கிழங்கு – இரண்டு, மல்லித்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலா – அரை டேபிள்ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, அரைக்க: சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் – அரை கப், சின்ன வெங்காயம் – 15, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா – தலா அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

முதலில் முந்தைய நாள் இரவே பட்டாணி வகைகளை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் சோம்பு, கல்பாசி, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து லேசாக தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ரெண்டு பெரிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கி வரும் பொழுது நீங்கள் இரண்டு பழுத்த தக்காளி பழங்களை கழுவி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து இதனுடன் சேர்த்து வதக்கி விடுங்கள். அரைக்காமலும் சேர்க்கலாம் ஆனால் அரைத்து சேர்க்கும் பொழுது தான் குருமா கெட்டியாக கிரேவி பதத்திற்கு வரும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசம் போக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் மற்றும் பட்டாணி, சுண்டல் போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடம் காய்கறிகள் வதங்கி வர மல்லித்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து மசாலா வாசம் போக வதக்கி விட வேண்டும். அடிப்பிடிக்காமல் வதங்கி வர வேண்டும், அதற்குள் நீங்கள் இன்னொரு அடுப்பில் வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் சிறிய அளவில் அரை மூடி தேங்காய் ஒன்றை துருவி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த இந்த தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் 15 தோல் உரித்து சேர்த்து நன்கு வதக்குங்கள்.

இதையும் படிக்கலாமே:
ஒரு முறை இந்த எலுமிச்ச பழத் துவையல் அரைச்சு சாப்பிட்டு பாருங்க, சாதம் கூட வேண்டாம் வெறும் துவையல் போதும் சொல்லுவீங்க. இப்படி ஒரு துவையலை நீங்க கண்டிப்பா சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க

இதனுடன் சோம்பு, சீரகம், மிளகு, கசகசா ஆகியவற்றை சேர்த்து ஒரு கத்து கருவேப்பிலையை போட்டு நன்கு வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதை குக்கரில் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய மல்லி தழைகளை தூவி குக்கரை மூடி ரெண்டு விசில் விட்டு எடுங்கள். மணக்க மணக்க சுவையான குருமா தயார்! இதே போல நீங்களும் சுலபமாக இந்த சுவையான குருமா ரெசிபி ஒருமுறை செஞ்சி சாப்பிட்டு பாருங்க, அடிக்கடி செய்வீங்க!

- Advertisement -