வெறும் நூடுல்சை வாங்கிட்டு வந்து எப்படி ‘வெஜ் நூடுல்ஸ்’ செய்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா?

noodles

நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவு வகை. நூடுல்ஸை பற்றி ஆயிரம் குறைகளை கண்டுபிடித்தாலும் அதன் மோகம் என்னவோ இன்னும் விட்டபாடில்லை. பாக்கெட்டுகளில் விதவிதமான பெயர்களில் அடைத்து விற்கப்படும் நூடுல்ஸ், மசாலா கலவை பாக்கெட்டுகள் இலவசமாக கொண்ட நூடுல்ஸ்களை நாம் வாங்கி சாப்பிடுவதை விட வெறும் நூடுல்ஸ் வாங்கி அதில் நாமே வீட்டில் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டு சமைத்து சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

noodles1

வெஜ் நூடுல்ஸ் எப்படி செய்வது?
ரொம்ப கஷ்டம் எல்லாம் இல்லைங்க, சாதாரணமா ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வோம்? அதே போல தான் இதுவும். எந்த வித்தியாசமும் இல்லை. பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் இந்த உணவு வகையை நாம் ஈசியாக தயாரித்து விடலாம். காய்கறிகள் மட்டும் அதிகம் தேவை.

வெஜ் நூடுல்ஸ் செய்ய தேவையான தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் – 1 பாக்கெட், கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், வெங்காயத்தாள், குடைமிளகாய் – தலா 50g, பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – 2, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் – தலா 1 டீஸ்பூன், பூண்டு பல் – 6, உப்பு – தேவையான அளவு.

noodles2

செய்முறை விளக்கம்:
இந்த வெஜ் நூடுல்ஸை கடைகளில் தனியாகவும் வைத்து விற்பனை செய்கின்றனர். அதில் மசாலாக்கள் எல்லாம் இருக்காது. வெறும் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கி கொள்ளுங்கள். நூடுல்ஸ் என்பது நம் நாட்டு உணவு வகையாக இல்லாவிட்டாலும் இது எங்கு தோன்றியது என்பது இது நாள் வரை விவாதத்திற்கு உள்ளாகவே இருந்து வருகிறது என்பது தான் உண்மை. நம் நாட்டு சேமியாவை விட நூடுல்ஸை குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர். அதை அவர்களின் உடல் நலத்தை பாதிக்காத வண்ணம் நாம் செய்து கொடுப்பதில் தவறில்லை.

- Advertisement -

நூடுல்ஸை தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். நூடுல்ஸ் சரியான பதத்திற்கு வந்ததும் வடிகட்டி அதில் ஐஸ் வாட்டர் அல்லது சாதாரண தண்ணீர் ஊற்றி விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் தயார் செய்வதற்குள் அந்த சூட்டிலேயே அது இன்னும் வெந்து கொண்டிருக்கும். இப்படி நீங்கள் தண்ணீர் ஊற்றுவதால் உங்களுக்கு எந்த பதத்திற்கு தேவையோ அந்த அளவிற்கு அப்படியே இருக்கும்.

noodles3

நூடுல்ஸை ஒரு தட்டில் தண்ணீர் வற்ற பரப்பி வைத்துக் மேலே லேசாக எண்ணெய் ஊற்றி பிசிறி விட்டுக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் மிளகு அளவிற்கு குட்டி குட்டியாக நறுக்கிய பூண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் வெங்காயத்தாள், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடை மிளகாய் போன்றவற்றை சேர்த்து வதக்கவும். காய்கறிகளை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். முட்டைகோஸையும் நீள நீளமாக நூடுல்ஸ் மாதிரி நறுக்கிக் கொள்ளுங்கள்.

noodles4

பின்னர் காய்கறிகள் அனைத்தும் வெந்து வந்ததும், உங்களிடமிருக்கும் சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் போன்றவற்றை தலா ஒரு டீஸ்பூன் அளவிற்கு ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பிரட்டு பிரட்டி விட்டு ஆற வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு 2 நிமிடம் வரை ஹை ப்ளேமில் வைத்து காய்கறிகளுடன் ஒன்றாக கலந்து விடுங்கள். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமா காய்கறிகள் மட்டும் வைத்து சூப்பரான வெஜ் நூடுல்ஸ் செய்து விடலாம். இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை செய்து கொடுத்து விட்டால் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் செய்து கொடுத்து அசத்துங்கள்.

இதையும் படிக்கலாமே
வாழைக்காயை இப்படி பொடிமாஸ் செய்து பாருங்கள். எல்லா சாப்பாடுக்கும் ஏற்ற செம்ம சைட் டிஷ்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.