கடையில் அதிக காசு கொடுத்து வாங்கும் வெஜ் ஸ்ப்ரிங் ரோல் வீட்டில் எப்படி எளிதாக செய்து கொடுப்பது? இது தெரிஞ்சா இனி அடிக்கடி இதை செய்ய ஆரம்பிச்சிடுவாங்க!

veg-spring-roll1_tamil
- Advertisement -

வெஜ் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி

கடைகளில் விற்கப்படும் வெஜ் ஸ்ப்ரிங் ரோல் செய்வது பெரிய கம்பு சுத்துற வேலை எல்லாம் ஒன்றும் இல்லைங்க! வீட்டிலேயே ரொம்ப எளிதான முறையில் இதை செய்யலாம். ஆனால் இதை செய்வதற்கு சில சாஸ்கள் நமக்கு தேவைப்படும். இது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் ஒருமுறை வாங்கி வைத்து விட்டால், நீங்கள் பிரைட் ரைஸ், பீட்சா, இது போல வெஜ் ரோல் செய்வதற்கு ரொம்பவே யூஸ்ஃபுல் ஆக இருக்கும். வெஜ் ரோல் ரெசிபி சுலபமாக செய்வது எப்படி? என்பதை இனி பார்ப்போம் வாருங்கள்.

வெஜ் ஸ்ப்ரிங் ரோல் செய்ய தேவையான பொருட்கள்:

குடை மிளகாய், முட்டைகோஸ், வெங்காயத்தாள், கேரட் – 500 கிராம், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், இடித்த பூண்டு பல் – ஆறு, காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன், சில்லி சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு தூள் – அரை ஸ்பூன், ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ்.

- Advertisement -

வெஜ் ஸ்ப்ரிங் ரோல் செய்முறை விளக்கம்:

வெஜ் ஸ்ப்ரிங் ரோல் செய்வதற்கு முதலில் ஸ்ப்ரிங் சீட்டுகள் தேவை. 20 சீட்டுகள் கொண்ட ஸ்ப்ரிங் சீட் பேக் 100 ரூபாய் முதல் சூப்பர் மார்க்கெட்டிகளில் கிடைக்கும். ஸ்பிரிங் ஷீட் இல்லை என்றால் மைதா மாவை பிசைந்து உருட்டி எவ்வளவு மெல்லிதாக தேக்க முடியுமோ, அவ்வளவு மெல்லிதாக ஷீட்ஸ் போல சதுரமாக தேய்த்து வெட்டி காய வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேவையான எல்லா காய்கறிகளையும் மிகவும் மெல்லியதாக நீளவாக்கில் பொடியாக நறுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் முதலில் இடித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். பூண்டு நன்கு பொன்னிறமாக வறுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வெங்காய தாளுடன் கூடிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை லேசாக வதங்கி கொண்டிருக்கும் பொழுது காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது நல்ல ஒரு நிறத்தை கொடுக்கும்.

- Advertisement -

பின்னர் அடுத்ததாக மிகவும் மெல்லியதாக நீளவாக்கில் பொடி பொடியாக நறுக்கிய கேரட் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் பாதி அளவிற்கு வெந்து வரும் பொழுது நீங்கள் இதே போல குடைமிளகாய்களை சேர்த்து வதக்க வேண்டும். இறுதியாக முட்டைகோஸ் சேர்த்து வதக்கி விடுங்கள். இவை நன்கு வதங்கிய பிறகு சோயா சாஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் வெங்காயத் தாளையும் தூவி கொள்ளுங்கள். ஒருமுறை நன்கு கலந்து விட்ட பிறகு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். கருப்பு மிளகு தூளை விட வெள்ளை மிளகு தூள் சேர்த்தால் நன்றாக இருக்கும். இவை நன்கு வெந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
முருங்கைக்கீரை பொடி இருந்தா உதிரி உதிரியாக இப்படி சாதம் செய்து பாருங்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க! அடிக்கடி இதை சாப்பிட்டால் ஒரு முடி கூட கொட்டாது உங்களுக்கு தெரியுமா?

பிறகு நீங்கள் தயாராக எடுத்து வைத்துள்ள சதுரமாக வெட்டிய மெல்லிய வெஜ் ஸ்ப்ரிங் சீட்டுக்குள் இதை வைத்து வெஜ் ரோலுக்கு எப்படி மடிக்க வேண்டுமோ, அது போல உருட்டி மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக நீங்கள் மைதா மாவை பேஸ்ட் போல கரைத்து உள்ளே ஸ்டஃப்பிங் செய்யப்பட்டுள்ள பொருட்கள் வெளியே வராதவாறு ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சூடான எண்ணெயில் ஒவ்வொரு ஸ்ப்ரிங் ரோலையும் போட்டு சிவக்க எல்லா புறத்திலும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் வெஜ் ஸ்ப்ரிங் ரோல் ரெடி! இதே மாதிரி நீங்களும் வீட்டில் உங்களுடைய குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.

- Advertisement -