வெஜிடபிள் கிரேவி செய்வது இவ்வளவு ஈஸியா? ஹோட்டலில் சாப்பிட்டால் கூட இப்படி ஒரு சுவையை நீங்கள் அனுபவிக்க முடியாது. சுவையான வெஜிடபிள் கிரேவி குருமா சீக்ரெட் ரெசிபி இதோ உங்களுக்காக!

- Advertisement -

விதவிதமான குருமா வகைகளை விட இந்த முறையில் நீங்கள் ஒரு முறை வெஜிடபிள் குருமா செய்து பாருங்கள் ரொம்பவே வித்தியாசமான, டேஸ்டியான ஒரு சுவையை கொடுக்கும். ஹோட்டலில் கூட இந்த ஒரு குருமா ரெசிபியை நீங்கள் சுவைத்து பார்த்திருக்க மாட்டீர்கள். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பம், சாதம் என்று எல்லாவற்றுக்குமே இந்த குருமா அட்டகாசமான காம்பினேஷன் ஆக நிச்சயம் இருக்கும். நீங்களும் இந்த எளிமையான மற்றும் அருமையான வெஜிடபிள் குருமா கிரேவியை இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க அசத்துங்க.

வெஜிடபிள் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி – ஒரு கப், தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 4, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், இஞ்சி – 2 இன்ச், பூண்டு பல் – 5, நெய் அல்லது சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், மசாலா: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அண்ணாச்சி பூ, கல்பாசி – தலா 1, குழம்பு மிளகாய்த்தூள் – ரெண்டு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் – ஒரு கப், முந்திரி பருப்பு – ஐந்து, கசகசா – அரை ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு.

- Advertisement -

வெஜிடபிள் குருமா செய்முறை விளக்கம்:
வெஜிடபிள் குருமா செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் அல்லது எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.

இவை லேசாக பொரிந்ததும், நறுக்கிய ரெண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள். இவை வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். லேசாக வதக்கி விட்டு பின்பு பூண்டு மற்றும் இஞ்சியை சம அளவிற்கு தோல் உரித்து நறுக்கி சேருங்கள். இவற்றின் பச்சை வாசம் போக ஒரு பிரட்டு பிரட்டி விட்டு, அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். ஆறிய இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்ததில் ஒரு குக்கரை வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும், மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும். இவை தாளித்ததும் மீதம் இருக்கும் இரண்டு வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளியை சேர்த்து மசிய வதக்கி விடுங்கள். பின்னர் நீங்கள் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்க வேண்டும். காய்கறிகள் ஓரளவுக்கு வதங்கி வரும் பொழுது, நீங்கள் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
டயட் என்றாலே கஷ்டப்பட்டு தான் இருக்கணுமா என்ன? ஏன் ஜாலியா இந்த லட்டு சாப்பிட்டு கூட டயட் இருக்கலாமே. அழகுடன் ஆரோக்கியத்தையும் சேர்த்த பராமரிக்க தினமும் இந்த ஒரு லட்டு போதும்.

உங்கள் காரத்திற்கு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். பிறகு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போக கொதிக்க விட வேண்டும். குழம்பு கொதிப்பதற்குள் நீங்கள் அதே மிக்ஸி ஜாரில் தேங்காய், கசகசா மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். கிரேவியுடன் இந்த தேங்காய் பேஸ்டையும் சேர்த்து உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து, குக்கரை மூடி வைத்து விடுங்கள். உங்கள் குக்கருக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று விசிலில் அருமையான வெஜிடபிள் கிரேவி குருமா ரெசிபி ரெடி! நறுக்கிய மல்லி தழையை தூவி சுடச்சுட இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதத்துடன் தொட்டு சாப்பிடுங்கள், வேற லெவலில் இருக்கும்.

- Advertisement -