அட! காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்க இவ்வளவு சூப்பர் ஐடியாவா? இது வரைக்கும், இப்படி ஒரு ஐடியாவை கேள்விப்பட்டதே இல்லையே.

vegetable2

இந்த லாக்டவுன் சமயத்தில் நம் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் காய்கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க, சில டிப்ஸ் புதியதாக! உங்களுக்காக, முதலில் தக்காளி. நிறைய தக்காளிகளை வாங்கி ஸ்டோர் செய்வது கொஞ்சம் கடினமான விஷயம்தான். தக்காளி பழுத்த தக்காளியாக இருந்தால், சீக்கிரமே கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. தக்காளி கெட்டுப்போவதற்கு காரணம் காம்புப் பகுதிகள். காம்பு பகுதிகளில் இருந்துதான் நீர் வடியத் தொடங்கும். அதன் பின்புதான் தக்காளி அழுகிய நிலைக்கு செல்லும்.

தக்காளியின் காம்புப் பகுதியில் ஈரத்தன்மை படாமல் இருந்தால், தக்காளியை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் ஏதாவது ஒரு எண்ணெயை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு விரலில் அந்த எண்ணெயை தொட்டு உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா தக்காளியின் காம்பு பகுதிகளிலும் லேசாக தடவி, தக்காளி ஸ்டோர் செய்யும் கூடையில் கவிழ்த்தபடி வைக்க வேண்டும். இப்படி வைத்தால் தக்காளி நீண்ட நாட்களுக்கு பிரிட்ஜில் வைத்தாலும், வெளியே வைத்தாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

அடுத்தபடியாக இஞ்சி. இஞ்சியை வாங்கி வந்து அப்படியே ஒரு வெள்ளை நிற காட்டன் துணி பையில் போட்டு சுருட்டிப் ஃப்ரிட்ஜில் டோர் பக்கத்தில் வைத்து விட்டால், இஞ்சி நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக இருக்கும். உங்கள் வீட்டில் பிரிட்ஜ் இல்லை என்றால் இஞ்சியை ஓரளவுக்கு பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு ஈரத் துணியில் சுருட்டி, சிங்குக்கு அருகில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஈரப்பதம் உள்ள இடங்களில் இஞ்சி இருந்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும். துணியை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக வெங்காயம். வெங்காயம் ஈரத் தன்மையோடு இருந்தால் கெட்டுப் போகும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். இந்த வெங்காயத்தை வாங்கியவுடன் வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள். அதன் பின்பு நியூஸ் பேப்பரின் மேல் தான் வெங்காயங்களை வைக்கவேண்டும். ஒன்றன் மேல் ஒன்றாக வெங்காயத்தை வைத்து ஸ்டோர் செய்தால் அடியிலிருக்கும் வெங்காயம் கட்டாயம் கெட்டுப்போக தான் செய்யும்.

- Advertisement -

வெங்காய கூடையின் அடியில் ஒரு நியூஸ் பேப்பரை விரித்து விட்டு வெங்காயத்தை பரவலாக அடுக்கி வைக்க வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் வெங்காயத்தை இருட்டாக இருக்கக்கூடிய இடத்தில் ஸ்டோர் செய்தால், அது சீக்கிரமே கெட்டுப் போய்விடும். வெளிச்சம் உள்ள இடத்தில்தான் வெங்காயத்தை வைக்க வேண்டும். முடிந்தால் புடவை எடுக்கும் போது, சிறிய குழந்தைகளுக்கு டிரஸ் எடுக்கும் போது, அதை அட்டைப் பெட்டியில் போட்டு தருவார்கள். அந்த அட்டைப் பெட்டியை வெங்காயங்களை அடுக்கி வைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களுக்கு வெங்காயம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

vegetable3

உங்களுடைய வீட்டில் பிரிட்ஜ் இல்லை என்றால் என்ன செய்வது? ஒரு அகலமான பாத்திரத்தில் காய்கறிகளை போட்டு கொள்ள வேண்டும். காய்கறிகள் பரவலாக இருக்க வேண்டும். ஒன்றன்மேல் ஒன்று வைக்கக்கூடாது. ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து கொள்ள வேண்டும். அந்த காட்டன் துணிகளை காய்கறி பரப்பி வைத்திருக்கும் பேசனின் மீது போட்டு மூடி, அதன் மேலே ஒரு தாம்பூலத் தட்டை எடுத்து கவிழ்த்து மூடி வைத்துவிடுங்கள். துணியின் ஈரம் காய்ந்ததும் அந்த துணியை மீண்டும் நனைத்து பிழிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

vegetable4

நிறைய காய்கறிகள் இருந்தால் பேசினில் வைக்கலாம். கொஞ்சம் பெரிய அளவில் ஹாட் பேக் இருந்தால், அதன் உள்ளே காய்கறிகளை வைத்து, ஈரத் துணியைப் போட்டு மூடி, ஹாட் பேக்கின் மேலே இருக்கும் மூடியை துணியின் மேல் வைத்து, லாக் செய்து விட்டால், உள்ளே இருக்கும் காய்கறிகள், இன்னும் பிரிட்ஜில் வைத்தது போல் சூப்பராக பிரஷ்ஷாக இருக்கும். உங்களுடைய வீட்டில் பிரிட்ஜ் இல்லை என்றால் கொத்தமல்லித்தழை, புதினா தழை, பச்சை மிளகாய், போன்ற காய்கறிகளை இப்படி ஹாட் பேக்கில் உள்ளே வைத்து ஈரத் துணியைப் போட்டு மேலே லாக் செய்து, ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.