உங்கள் தோட்டத்திற்கு காய்கறி மற்றும் பழக்கழிவை போடுகிறீர்களா? அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கிட்டு அப்பறமா போடுங்க.

- Advertisement -

தோட்டத்திற்கு பெரும்பாலும் இயற்கை கழிவுகளாக காய்கறி மற்றும் பழ கழிவுகளை தான் நாம் தேர்ந்தெடுத்து போட்டு வருவோம். அப்படி போடும் பொழுது நேரடியாக நீங்கள் அப்படியே போட்டால், உங்களுக்கு செடிகள் முழுவதும் கொசு மற்றும் புழு, பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கும். அதை எப்படி வேறொரு முறையில் நாம் போட்டு அதிக பயன் பெறுவது? தோட்டத்து கொசுக்களை எப்படி சமாளிப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

uram1

வீட்டில் காய்கறிகள் நறுக்கும் பொழுது தக்காளி, வெங்காயம் போன்றவற்றின் தோல்களும், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், முருங்கைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய் போன்றவற்றின் தேவையற்ற பகுதிகளையும் வீணாக தூக்கி எரிவதற்கு பதிலாக செடிகளுக்கு உரமாக போடுகிறோம். அதே போல் டீ போட்டு விட்டு மீதமிருக்கும் டீ தூளை அப்படியே கொண்டு போய் செடிகளுக்கு போடுகிறோம். பழங்களை சாப்பிட்டு விட்டு தேவையற்ற அத்தனை கழிவுகளையும் அப்படியே கொண்டு போய் போட்டு விடுகிறோம். முட்டை ஓட்டு பகுதிகளையும் எதுவும் செய்யாமல் அப்படியே தான் கொண்டு போய் கொட்டுகிறோம். நீங்கள் இவ்வாறு தோட்டத்திற்கு உரம் போடுகிறேன் என்கிற பெயரில் வீட்டில் குப்பையில் தூக்கி எரியும் காய்கறி தோல்களையும், பழவகைகளையும் அப்படியே கொண்டு போய் வேர் பகுதியில் கொட்டி விடுவதால் செடிகளுக்கு அது வேறொரு வகையில் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

- Advertisement -

இதுபோல் நீங்கள் நேரடியாக காய்கறி மற்றும் பழக்கழிவுகளை போடும் பொழுது உங்களுக்கு கொசுக்கள் தொல்லையும், பூச்சி மற்றும் பூஞ்சை தொல்லையும் நிச்சயம் வந்து விடும். இதனால் செடிகளை சுற்றி தோட்டம் முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கும். இதிலிருந்து நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. அதனால் இப்படி நேரடியாக போடாமல் வேறு வகையில் நாம் எப்படி போடுவது என்பதை இனி பார்ப்போம்.

kitchen-waste-kaikari-kazhivu1

நீங்கள் தினமும் உபயோகிக்கும் பழ மற்றும் காய்கறி கழிவுகளையும், மீதமிருக்கும் தேயிலை தூளையும் தனித் தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் நீங்கள் காய்கறி வேக வைக்கும் தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர், முட்டை வேக வைத்த தண்ணீர், கிழங்கு வகைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் வேகவைத்த எந்த சத்து மிகுந்த தண்ணீரையும் வீணாக்காதீர்கள். அப்படியே ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது நீங்கள் சேகரித்த காய்கறி மற்றும் பழ தோல் கழிவுகளை மட்டும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த அரைத்த விழுதுடன் எடுத்து வைத்த டீ தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை ஒரு லிட்டர் அளவிற்கு வேக வைத்த சத்து தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள்.

kitchen-waste-kaikari-kazhivu

இப்போது இந்த கலவையை நீங்கள் 4 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நீர்மமாக கரைத்துக் கொள்ளுங்கள். அதிக சத்துக்கள் உங்களுக்கு இந்த இயற்கையான கலவையில் இப்போது நிரம்பி இருக்கும். இந்த தண்ணீரை நீங்கள் உங்கள் தோட்டத்தில் இருக்கும் அத்தனை வகை செடிகளுக்கும் உபயோகித்தால் செடிகள் செழித்து கொத்துக்கொத்தாக பூக்களையும், காய், கனிகளையும் உங்களுக்கு வாரி வழங்கும்.

- Advertisement -

watering-plant

தினமும் நீங்கள் இதற்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி இதை செய்து வைத்து உங்கள் செடிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க டானிக்கை எந்தவிதமான பூச்சி தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் செய்து வந்தால் போதுமானது. நீங்கள் நேரடியாக வைக்கும் பொழுது உங்களுக்கு கொசு தொல்லை, பூச்சித் தொல்லைகள் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் இப்படி செய்து வைத்தால் எந்த விதமான கொசுக்களும் பூச்சிகளும் உங்கள் தோட்டத்திற்கு வராது.

plants-spray

மாவுப்பூச்சி, சிலந்திப்பூச்சி போன்றவற்றை உங்கள் தோட்டத்து செடிகளிடம் நெருங்கவிடாமல் தடுப்பதற்கு வேப்ப எண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து சாமான் கழுவ உபயோகிக்கும் டிஷ் வாஷ் லிக்விட் அல்லது சோப்பு கரைசலை ஒரே ஒரு டீஸ்பூன் ஊற்றி ஸ்பிரே பாட்டிலில் கலந்து நன்கு குலுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் வேப்பெண்ணை, தண்ணீருடன் நன்கு டைல்யூட் ஆவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் தான் டிஷ் வாஷ் லிக்விட் உபயோகிக்கிறோம். இதை வாரம் இரண்டு முறை இலைகள் மற்றும் வேர் பகுதியில் தெளித்து விட்டால் போதும். எந்தவிதமான பூச்சிப் புழுக்களும் உங்கள் தோட்டத்தை நெருங்காது. நீங்கள் உங்கள் செடிகளுக்கு இதை செய்து பயன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
காலையில் எழுந்ததும் நீங்க இதெல்லாம் செய்வீங்களா? செய்யலைன்னா! நீங்க வெற்றியடைவது கொஞ்சம் கஷ்டம் தான் பாத்துக்கங்க!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -