ஒரு சொட்டு எண்ணெய் கூட சேர்க்காம குக்கரில் 10 நிமிடத்தில் இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான குருமாவை சட்டுனு ரெடி பண்ணிடலாம் தெரியும்மா? சுவை தாறுமாறா இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.

kuruma
- Advertisement -

இட்லி தோசைக்கெல்லாம் சாம்பார் சட்னி எப்படி நல்ல சுவையான சைட் டிஷ்ஷோ அதே போலத் தான் இந்த குருமாவும். சாதாரணமாக சட்னி சாம்பார் வைத்து சாப்பிடுவதை காட்டிலும் இந்த குருமாவை ஊற்றி சாப்பிடும் பொழுது இட்லியும் தோசையும் சுவை அதிகமாகவே இருக்கும். அதே நேரத்தில் கொஞ்சம் கூடுதலாகவும் சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் ஒரு சொட்டு கூட எண்ணெய் சேர்க்காமல் சுலபமாக குருமாவை சீக்கிரத்தில் எப்படி வைப்பது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த குருமா செய்ய முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/4 கப் உருளைக்கிழங்கு, 1/4 கப் பீன்ஸ், 1/4 கப் கேரட், 1/4 கப் பச்சை பட்டாணி இத்துடன் இந்த குருமாக்கு உங்களுக்கு விருப்பமான வேறு காய்கறிகளை சேர்ப்பதாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அதே போல் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
இத்துடன் ஒரு பெரிய தக்காளியும் நீளவாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் இரண்டு பச்சை மிளகாய் கீறி அதையும் சேர்த்து இந்த காய்கள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி குக்கரை ஒரே ஒரு விசில் மட்டும் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

அடுத்து இந்த குருமாவுக்கு ஒரு மசாலாவை தயார் செய்ய வேண்டும். அதற்கு மிக்ஸி ஜாரில் 1/4 கப் துருவிய தேங்காய், 10 முந்திரி, 1 டீஸ்பூன் சோம்பு, 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1டீஸ்பூன் சோம்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக மீண்டும் அடுப்பை பற்ற வைத்து ஏற்கனவே வேக வைத்த காய்கறியுடன் அரைத்த இந்த மசாலாவையும் சேர்த்து ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இது ஒரு பத்து நிமிடம் வரை கொதித்தால் போதும் குருமா நன்றாக கொதித்து விடும். கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள் சுவையான குருமா தயார்.

இதையும் படிக்கலாமே: உடல் எடையை குறைக்கும் கொள்ளு சட்னி! ரொம்ப ஈசியாக 10 நிமிடத்தில் நம்ம வீட்டிலேயே இப்படித்தான் ருசியாக தயாரிக்கணுமா?

இப்போது சுட சுட இட்லி தோசை உடன் இந்த குருமாவை தாராளமாக ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும் ஒரு சொட்டு எண்ணெய் கூட சேர்க்காமல் சுலபமாக இந்த குருமா செய்து விடலாம். இனி வேலைக்கு போக வேண்டிய அவசரமான நேரத்தில் கூட அட்டகாசமாக சமைத்து சாப்பிடலாம்.

- Advertisement -