நம்முடைய நாடு நன்றாக முன்னேறி விட்டது, எல்லோரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள், நல்ல சம்பாத்தியத்தில் இருக்கிறார்கள், என்று சொன்னாலும், ஒரு சில பேர் இன்றும் நல்ல வேலை கிடைக்காமல் வறுமையில் வாடி வதங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். ஏறி இறங்காத கம்பெனியே இருக்காது. முயற்சி செய்யாத வேலையே இருக்காது. ஆனாலும் அன்றாட வருமானம் 100 ரூபாய் கூட கிடைக்காமல் கஷ்டப்படும் மக்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.
நல்லவேளை கிடைக்காமல் வீட்டிற்கு போக வழி இல்லாமல், வெளியூரில் தங்கி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். வீட்டு செலவை சமாளிப்பதற்கு, கணவன் பாரத்தை குறைக்க, நிறைய பெண்கள் வேலை தேடிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை செய்து பாருங்கள். தாந்திரீக பரிகாரம் என்றாலும் இது குலதெய்வத்தை நினைத்து செய்யக்கூடிய எளிமையான ஆன்மீக பரிகாரம் தான்.
நல்ல வேலையைத் தரும் கல் உப்பு பரிகாரம்
ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம். இந்த பரிகாரத்திற்கு சமையலறையில் இருக்கும் கல் உப்பு போதும். நாளையோ அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, எப்போது வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அதுவும் ஒரே ஒரு நாள் மட்டும் தான் இந்த பரிகாரத்தை செய்யப்போகின்றோம்.
குளிக்க செல்வதற்கு முன்பாக ஒரு கை பிடி கல்லுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தலையை 27 முறை சுற்றுங்கள். பிறகு தலையில் இருந்து பாதம் வரை, மேலிருந்து கீழ் பக்கமாக ஏற்றி இறக்க வேண்டும். 7 முறை ஏற்றி இறக்கவும்,. பிறகு அந்த கல்லுப்பை ஒரு பேப்பரில் வைத்து மடித்து குப்பையில் போட்டு விட வேண்டும். இந்த கல்லுப்பை நெருப்பில் போட்டால் ரொம்ப சிறப்பு. கொட்டாங்குச்சி கொளுத்தி அந்த நெருப்பில் போடலாம்.
வாய்ப்பு இல்லாதவர்கள் இதை ஒரு வெள்ளை பேப்பரில் வைத்து மடித்து வீட்டிற்கு வெளியே இருக்கும் குப்பையில் தூக்கி போட்டு விட வேண்டும். மீண்டும் வீட்டிற்கு வந்து சுத்த பத்தமாக குளித்து விடுங்கள். முடிந்தால் தலைக்கு குளியுங்கள் அதுதான் நல்லது. வேலை கிடைக்காமல் தடுக்கும் அத்தனை எதிர்மறையாற்றலும் உங்களை விட்டு நீங்கிவிடும்.
குளித்த பிறகு மீண்டும் வந்து 1 ஸ்பூன் கல் உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதை உள்ளங்கைகளில் வைத்து நல்ல வேலை கிடைக்க வேண்டும், நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும், உங்களுடைய தகுதிக்கு தகுந்த வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும்.
ஏதாவது இன்டர்வியூக்கு போயிருக்கீங்க, அந்த வேலையில் இருந்து ரிசல்ட் வரவில்லை, அந்த வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால், அந்த வேலையின் பெயர், உங்களுக்கான பதவி எல்லாம் உங்களுக்கு தெரியும் அல்லவா, அதையெல்லாம் சொல்லி அந்த வேலை உங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அந்த உப்பை ஒரு வெள்ள பேப்பரில் வைத்து மடித்து குலதெய்வத்தை மனநிறைவோடு வேண்டி, பாக்கெட், பர்ஸ் எதில் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்தால் நீங்கள் நினைத்த வேலை நிச்சயம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: உடல்வலி தீர பப்பாளி பரிகாரம்
வேலை கிடைத்த பின்பு, பாக்கெட்டில் வைத்து அந்த கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். இதை ஒரு முறை செய்யும்போதே வேலையில்லாதவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கல் உப்பு வைத்து செய்யக்கூடிய பரிகாரங்கள் எதுவும் தோற்றுப் போனதாக சரித்திரம் இல்லை. நம்பிக்கையோடு செய்தால் நல்லது மட்டுமே நடக்கும் உங்கள் வறுமை நிறைந்த வாழ்க்கை சிக்கல் நிறைந்த வாழ்க்கையில் தீர்வு பெற இந்த பரிகாரம் ஒரு வரப்பிரசாதம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.