ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடங்களுக்கான பலன்கள்

chandhiran

நமது ஜோதிட சாஸ்திரங்களில் சந்திரன் “மனோகாரகன்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மனிதனாக பிறக்கின்ற அனைவரின் மனதையும் ஆளும் நாயகனாக சந்திர பகவானே இருக்கிறார். குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு அடுத்து ஓரளவிற்கு சுப கிரகமாக கருதப்படும் “சந்திர பகவான்” ஜாதகத்தில் அவர் இருக்கின்ற இடங்களை பொறுத்து பலன்களை தருகிறார். அப்படி சந்திரன் ஜாதகத்தில் எந்தெந்த இடங்களில் இருந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு மனிதனின் ஜாதகத்திலும் சந்திரன் சிறப்பான நிலையில் இல்லாவிட்டாலும், சந்திரன் நீச்சம் அடையாமல் இருப்பது சிறப்பு என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனெனில் சந்திரன் நீச்ச கதி பெற்றால் அந்த ஜாதகர் மனநிலை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. மற்ற கிரகங்களை போன்றில்லாமல் சந்திரன் தேய்ந்து வளரும் ஒரு கிரகமாக இருப்பதால் சந்திரன் வளர்பிறை காலத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்களும், தேய்பிறை காலத்தில் பிறந்தவர்களுக்கு பாதகமான பலன்களையும் தருகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலைகளை பொருத்தும் ஜாதகர்களுக்கு ஏற்படக்கூடிய பலன்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ஜாதக கட்டத்தில் சந்திரன் லக்னத்திலும், லக்னத்திற்கு 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலும், 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானங்களிலும், தன ஸ்தானமான 2 ஆம் வீட்டிலும், லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டிலும் இருக்கும் பட்சத்தில் அந்த நபர் அதிக வருமானம் கொண்ட நபராக இருப்பார். விவசாய நிலங்களும், வசதி மிக்க வீட்டையும் பெற்றிருப்பார். ஏராளமான பசுமாடுகளை கொண்டவராகவும், அந்த பசுக்களிலிருந்து பெறப்படும் பால் மூலமாகவும் மிகுந்த தனலாபங்களை பெறுபவராக இருப்பார்.

chandra bagavan

ஜாதகத்தில் 3, 5, 7, 11 ஆகிய இடங்களில் வளர்பிறை சந்திரன் பிற கிரகங்களின் சேர்க்கை பெறாமல், தனித்து நின்று, சுப கிரகங்களின் பார்வை பெற்றிருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் மிகுந்த செல்வந்தராக இருப்பார். முறைப்படி மருத்துவம் கற்று பிறரின் நோய்களை தீர்ப்பவராகவும், மந்திரம், ஜோதிட சாஸ்திரங்களில் நிபுணராக இருப்பார். இந்த ஜாதகரின் எதிரிகள் தாங்களாகவே ஒழிந்து போவார்கள். லக்னத்திற்கு 6 மற்றும் 8 ஆம் வீடுகளில் சந்திரன் இருந்தால் அவ்வளவு சிறப்பான பலன்களை தராது.

இதையும் படிக்கலாமே:
பெரிய இடத்து மனிதர்களின் நட்பை தரும் வேசி யோகம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Jathagam chandran palangal in Tamil. it is also called Jathaga palangal in Tamil or Chandran palan in Tamil or Jothida thagaval in Tamil or Jodhidathil chandran in Tamil.