வெளிநாடு வேலை கிடைக்க செய்யும் பரிகாரங்கள்

எந்த ஒரு நபரும் சோம்பி திரிவதை உண்மையில் விருப்புவதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் வேலைவாய்ப்பு என்பது அடிப்படை உரிமை என ஜனநாயக சட்டங்கள் கூறினாலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நமது நாட்டில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. “திரைகடலோடி திரவியம் தேடு” என நமது முன்னோர்கள் வாக்கிற்கு ஏற்ப பலரும் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றனர். ஆனால் எல்லோருக்குமே அத்தகைய வாய்ப்புகளை கிடைப்பதில்லை. இங்கு வெளிநாடுகளுக்கு வேலை மற்றும் பிற காரணங்களுக்காக செல்வதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக வெளிநாடுகளுக்கு வேலை மற்றும் சுற்றுலாவாக செல்வதற்கு அனைவருக்குமே விருப்பம் அதிகம் உள்ளது. ஆனால் வெளிநாடு செல்வதற்கு எந்த ஒரு மனிதரின் ஜாதகத்திலும் ஜல ராசியான சந்திர பகவான், சுக அதிபதியான சுக்கிர பகவான் ஆகியோர் நல்ல நிலையில் இருந்து, பாப கிரகங்களின் பார்வை படாமல் இருக்க வேண்டும். ராகு பகவானும் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். எல்லோருக்குமே மேற்கூறிய முறையில் ஜாதகம் அமைய வாய்ப்பில்லை என்பது எதார்த்தம். ஆனால் ஜோதிட பெரியோர்கள் கூறிய சில பரிகாரங்களை திட சித்ததோடு செய்து வரும் அனைவருமே வெளிநாடு செல்வதற்கான சூழலை உண்டாகும்.

வெளிநாடுகளுக்கு வேலை மற்றும் இன்ன பிற காரணங்களுக்காக செல்ல விரும்புபவர்கள் சந்திர பகவான் மற்றும் சுக்கிர பகவானை அவர்களுக்குரிய கிழமைகளில், அக்கிரகங்களுக்குரிய தானியங்கள், பூக்கள், நைவேத்தியங்கள் ஆகியவற்றை வைத்து வழிபட்டு வர வேண்டும். புது வீடு கட்டுபவர்கள் தங்கள் வீட்டின் தலை வாசல் ஸ்தாபிக்கும் போது, ஒரு சிறு வெள்ளி தகட்டை வாசக்கால் ஸ்தாபிக்கும் குழிக்குள் புதைத்து வைப்பதால் எதிர்காலங்களில் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் யோகமும், செல்வ சேர்க்கையும் உண்டாகும்.

Thirunageswaram temple

ஒரு நபர் வெளிநாடுகளுக்கு செல்ல நவகிரகங்களில் ராகு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி ராகு பகவானின் சாதகமான நிலை ஜாதகத்தில் இல்லாத போது சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு நெய் விளக்கேற்றி ராகு ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வருவது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமைகளில் “துர்க்கா சப்த ஸ்லோகி” மந்திர பாராயணம் செய்வதும் சிறந்த பரிகாரமாகும். சந்திரகாந்த கல் பதித்த வெள்ளி மோதிரத்தை வலது காய் மோதிர விரலில் எப்போதும் அணிந்திருக்க சந்திர பகவானின் நேர்மறை ஆற்றல்களை உங்களுக்கு தருவதோடு, வெளிநாடுகள் செல்வதற்கான சூழலையும் ஏற்படுத்தி தரும்.

இதையும் படிக்கலாமே:
நாக தோஷம் நீங்க வீட்டிலேயே செய்ய வேண்டிய பூஜை முறை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Velinadu velai pariharam in Tamil or Velinattil velai kidaikka pariharam in Tamil.