வெள்ளை முடிக்கு டை அடித்து இனி சிரமப்பட வேண்டாம். 15 நாட்களில் வெள்ளை முடியை, நிரந்தரமாக கருப்பாக மாற்ற இது ஒரு சூப்பர் டிப்ஸ். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன்.

hair

நம்முடைய முடியை கருப்பாக மாற்றுவதற்கு பல வழிமுறைகளில், பல பொருட்களை பயன்படுத்தி, பல குறிப்புகள் சொல்லப்பட்டிருந்தாலும் இயற்கையான முறையில், இயற்கையான பொருட்களை பயன்படுத்தி ஒரு எண்ணெய்யை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக இதில் கலக்கக்கூடிய பொருட்கள் நம்முடைய தலை முடியை வேரிலிருந்தே கருப்பாக வளர செய்யும். இந்த எண்ணெயை எப்படி தயார் செய்வதென்று தெரிஞ்சுக்கோங்க. தயார் பண்ணி 15 நாட்கள் எண்ணெயை தலைமுடியில் தடவி வந்தால் நல்ல ரிசல்ட் உங்களுக்கு தெரிய தொடங்கும். சரி, அந்த எண்ணெயை எப்படி தயாரிப்பது. என்னென்ன பொருட்கள் தேவை?

ellu

செம்பருத்தி பூக்கள் – 6, கருப்பு எள் – 4 டேபிள்ஸ்பூன், கரிசலாங்கண்ணி தூள் – 1 ஸ்பூன், நெல்லி பொடி – 1/2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 250 ml இதில் செம்பருத்தி பூக்களாக உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், செம்பருத்திப்பூ பவுடரை வாங்கி 4 டேபிள் ஸ்பூன் அளவு பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டாயம் கருப்பு எள்ளு தான் போட வேண்டும்.

முதலில் ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பொருட்களாக தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதாவது உள்ளே சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் சிறப்பு அடங்கும் வரை கொதிக்க வேண்டும்.

heating-oil

மிதமான தீயில் அடுப்பை வைத்து விட்டு 30 நிமிடங்கள் வரை மேலே சொன்ன பொருட்களை எல்லாம் தேங்காய் எண்ணெயில், இரும்பு கடாயில் கொதிக்க விட்டு, சிட சிடப்பு அடங்கி வந்ததும், அப்படியே கடாயை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்துவிட்டு, இரண்டிலிருந்து மூன்று நாட்கள் கடாயை வெள்ளை துணி போட்டு மூடி அப்படியே ஊற விட்டு விடுங்கள். இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றினால் எண்ணெயின் சத்து மேலும் அதிகரிக்கும்.

- Advertisement -

அதன் பின்பு இந்த எண்ணெயை ஒரு வடிகட்டியில் மூலமாகவோ வெள்ளை காட்டன் துணியின் மூலமாகவோ, நன்றாக வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டால், 6 மாதங்கள் வரைகூட கெட்டுப்போகாமல் இருக்கும். கட்டாயம் வாரத்தில் மூன்று நாட்களாவது இந்த எண்ணெயை உங்களுடைய தலையில் வேர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்து தரவேண்டும். இரவு இந்த எண்ணெயை தலையில் தேய்த்து விட்டு, அப்படியே விட்டு விட்டால் கூட போதும். மறுநாள் காலை எழுந்து ஷாம்பு போட்டு அல்லது சீயக்காய் போட்டு குளித்து விட்டால் உங்களது நரை முடி கொஞ்சம் கொஞ்சமாக கருப்பு நிறத்திற்கு மாறி வருவதை உங்களால் உணர முடியும்.

hair1

நீண்ட நாட்களுக்கு உங்கள் தலையில் இருந்து வந்த வெள்ளை முடி மாற கொஞ்ச நாட்கள் எடுக்கும். ஆனால், 15 நாட்களிலேயே நிச்சயமாக வித்தியாசத்தை உணரமுடியும். இந்த ரிமெடிக்கு பயன்படுத்தி இருக்கும் கருப்பு எள், நம்முடைய தலை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்றும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் கையில் பணம் சரளமாக புரள இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து பணம் இருக்கும் இடத்தில் வைத்தால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.