ஹோட்டல் ஸ்டைலில் சுவையான அதே சமயம் ஆரோக்கியமான வெஜ் வெள்ளை குருமா வீட்டில் இப்படி செஞ்சி பாருங்க. இனி யாரும் ஹோட்டல் பக்கமே போக மாட்டாங்க

Vellai kurma
- Advertisement -

நாம் என்னதான் வீட்டில் பார்த்து பார்த்து சமைத்தாலும் சில உணவுப் பொருட்களின் சுவை ஹோட்டலில் உள்ளது போல் வீட்டில் இருப்பதில்லை. இத்தனைக்கும் நாமும் அவர்கள் சேர்க்கும் அனைத்து மசாலா பொருட்களையும் போடத்தான் செய்யவோம், இருந்தாலும் அந்த ஹோட்டல் சுவை  நமக்கு வருவதில்லை. அப்படியான ஒரு உணவு தான் வெஜ் வெள்ளை குருமா. இனி வெஜ் வெள்ளை குருமாவை இந்த முறையில் செய்து பாருங்கள் ஹோட்டல் ஸ்டைலையே இது மிஞ்சிவிடும்.

தேவையான பொருட்கள்

வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கேரட், பீன்ஸ், காலிபிளவர், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு, பச்சை மிளகாய்

- Advertisement -

குருமா செய்முறை

முதலில் கேரட், பீன்ஸ் உருளைக்கிழங்கு இவைகள் அனைத்தும் தனித்தனியாக ஒரு கைப்பிடி அளவு நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.  காலிஃப்ளவரை  தனித்தனியாக பிரித்து சுடுதண்ணியில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சை பட்டாணி இருந்தால் நல்லது, காய்ந்த பட்டாணி என்றால் ஊறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரில் அரை மூடி அளவுக்கு துருவிய தேங்காய், ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் கசகசா, ஐந்து முந்திரி, நான்கு பச்சை மிளகாய், இவைகளை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குக்கரை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு பட்டை, இலவங்கம் ,ஏலக்காய், கல்பாசி போன்ற மசாலா பொருட்களுடன் சோம்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின் ஒரு பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கியவுடன் சிறிது கருவேப்பிலை போட்டவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வெறும் ஐந்தே நிமிடத்தில் செஞ்சு அசத்துங்க! இனிப்பு பணியாரம் யாருக்கெல்லாம் பிடிக்கும். இந்த ரெசிபி உங்களுக்காக. 

பின் நறுக்கிய காய்கறிகளை அதில் சேர்க்கவும். பிறகு அரைத்த தேங்காய் மசாலாவை இதில் சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். இவையெல்லாம் சேர்த்து மேலே நுரைத்து வரும்போது  ஒரு ஸ்பூன் சர்க்கரை, கால் கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து கொஞ்சம் கொத்தமல்லி தழையும் மேலே தூவி கொள்ளுங்கள். பின்பு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு  இறக்கி விடுங்கள். கமகமவென்று ஹோட்டல் ஸ்டைல் வெஜ் வெள்ளை குருமா ரெடி.

- Advertisement -