வெறும் ஐந்தே நிமிடத்தில் செஞ்சு அசத்துங்க! இனிப்பு பணியாரம் யாருக்கெல்லாம் பிடிக்கும். இந்த ரெசிபி உங்களுக்காக.

paniyaram
- Advertisement -

குழந்தைகள் மாலையில் வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மாதிரி ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால், இல்லத்தரசிகளுக்கு மனதில் ஒரு திருப்தி. அதே சமயம் அந்த ஸ்நாக்ஸை கொஞ்சம் ஹெல்த்தியாக செய்து கொடுக்கும் போது இன்னும் சந்தோஷம்தான். உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்குமா. இந்த இனிப்பு பணியாரம் ரெசிபி உங்களுக்காக மட்டும். மிக மிக எளிமையான முறையில் சாயங்காலம் டீ போடும் நேரத்தில் இந்த பணியாளத்தை சுட்டு எடுத்து விடலாம். வாங்க அந்த அருமையான ரெசிபி எப்படி செய்யறது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இதற்கு நமக்கு பழுத்த வாழைப்பழம் தேவை. எந்த வாழைப்பழம் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். பெரிய வாழைப்பழமாக இருந்தால் 1, சின்ன வாழைப்பழமாக இருந்தால் 2 வாழைப்பழத்தை தோல் உரித்து வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நறுக்கிய – வாழைப்பழம், கோதுமை மாவு – 1 கப், துருவிய வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – 3/4 கப், அரிசி மாவு – 1/4 கப், ஏலக்காய் – 2, உப்பு – 1 சிட்டிகை, தண்ணீர் – 1 கப், இந்த அளவுகளில் எல்லா பொருட்களையும் போட்டு மிக்ஸியை ஓட விடுங்கள். இந்த மாவு விழுதாக அரைத்து நமக்கு கிடைத்துவிடும். தண்ணீர் அதிகம் ஊற்ற வேண்டாம். இதே தண்ணீரே போதும்.

அரைத்த இந்த மாவை ஒரு தனியாக அகலமான பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள். இதோடு துருவைய தேங்காய் – 1/4 கப், சோடா உப்பு – 2 சிட்டிகை, போட்டு நன்றாக கலந்து ஒரு மூடி போட்டு 10 நிமிடம் மட்டும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு குழி பணியார கல்லை அடுப்பில் வைத்து, நெய் அல்லது எண்ணெய் உங்கள் விருப்பம் போல சேர்த்து, இந்த மாவை தேவையான அளவு ஊற்றி, ஒரு பக்கம் வெந்ததும் இன்னொரு பக்கமும் மெதுவாக திருப்பிப் போடுங்கள்.

- Advertisement -

வேகவைத்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்தால் சூப்பரான ஒரு இனிப்பு பரிகாரம் தயார். மிதமான தீயில் வேக வைத்து எடுங்கள் அதிக தீ வைத்தால் சீக்கிரம் பணியாரம் கறிந்து விடும். (எண்ணெய், நெய் கூட ரொம்ப அதிக அளவு ஊற்ற வேண்டாம். ஒரு ஸ்பூன் அளவு ஊட்டினால் கூட போதும்.)

இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். விருப்பமாக சாயங்காலம் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவுடன் சுடச்சுட வயிறு ரொம்ப சாப்பிட்டுக் கொள்வார்கள். வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு தேங்காய் சேர்க்கக்கூடாது, நெய் சேர்க்கக்கூடாது என்றால், தேங்காய் சேர்க்காமல் நெய் சேர்க்காமல் இந்த பணியாரத்தை செய்து கொள்ளலாம். நான்ஸ்டிக் குழிப்பணியார கடாயிருந்தால் மிகக் குறைந்த அளவில் எண்ணெய் சேர்த்து இந்த பணியாரத்தை சுட்டு எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ரெண்டு உருளைக்கிழங்கை வச்சு 5 நிமிஷத்துல அட்டகாசமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி. இப்படி மட்டும் செஞ்சு கொடுத்து பாருங்க டிபன் பாக்ஸ்ல ஒரு பருக்கை கூட மீதி இருக்காது.

இதைவிட ஈசியாக இனிப்பு பணியாரம் யாராலயாவது சுட முடியுமா என்ன. முடியவே முடியாது. சூப்பரான இந்த ஹெல்தி ரெசிபியை யாருமே மிஸ் பண்ணாதீங்க. இன்னைக்கு ஈவினிங் உங்க வீட்ல இந்த ஸ்நாக்ஸ் தான்.

- Advertisement -