வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

vellarikai

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தொட்டுக்கொள்ளும் பதார்த்தமாக காய்கறிகள் இடம்பெறுகின்றன. இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் சமைத்து, பக்குவம் செய்து சாப்பிட வகையைச் சார்ந்ததாக இருக்கின்றன. ஒரு சில காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடும் வகையில் இருக்கின்றன. அப்படியான ஒரு காய் தான் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

vellarikai

வெள்ளரிக்காய் நன்மைகள்

நார்ச்சத்து
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது அவசியமாகும். இந்த நார்ச்சத்து தான் நமது உணவு எளிதில் செரிமானம் ஆகி மலச்சிக்கல், வயிறு கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது கோடைகாலங்களில் மிகவும் பிரச்சனை தரக்கூடியதாக மாறுகிறது. தினமும் காலை அல்லது மதிய வேளைகளில் சிறிது வெள்ளரிக்காய்களை சாப்பிடுவதால் நார்ச்சத்து கிடைக்க பெற்று செரிமான திறன் மேம்பட்டு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

ஊட்டச்சத்து

நாம் அனைவருமே ஊட்டச்சத்து மிகுந்த உணவை சாப்பிட்டு வந்தாலே பெரும்பாலான நோய்கள் வராமல் தடுத்து விட முடியும். வெள்ளரிக்காயில் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடுகிறது.

vellarikai

- Advertisement -

நோய் எதிர்ப்பு தன்மை

கோடைகாலங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுலபமாக தொற்று நோய்களால் பாதிக்கப்படுவார்கள். வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துகொள்ள தினமும் ஒரு வெள்ளரிக்காயாவாது சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

சிறுநீரகங்கள்

நமது உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீரில் வெளிவேற்றும் செயல்களை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன.
கோடைகாலங்களில் உடல் அதிகம் வெப்பமடைவதாலும், நீர் அதிகம் அருந்தாமையாலும் நீர்ச்சுருக்கு, சிறுநீரக கற்கள் போன்றவை ஏற்படுகின்றன. தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும். நீர்ச்சுருக்கு போன்றவை குணமாகும்.

vellarikai

கண்கள்

வெப்பம் அதிகம் ஏற்பட்டால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடும். மேலும் முதுமைகாலம் வரை கண்பார்வை தெளிவாக இருப்பதற்கு சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியமாகும். வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

கல்லீரல்

மனிதர்களின் உடலில் இருக்கும் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. இப்படியான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும். கல்லீரல் பலம் பெறும்.

vellarikai

உடல் எடை குறைப்பு

அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் வெள்ளரிக்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

சரும பளபளப்பு

இளம் வயதில் நமது தோலில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் தோல் சுருக்கமில்லாமல் இருக்கிறது. மேலும் நீர்ச்சத்து உள்ள உணவுகள் போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கு தோல் ஆரோக்கியமாக இருக்கும். நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய்களை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமை தன்மையை கொடுக்கிறது.

vellarikai

கருப்பை பிரச்சனைகள்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். இந்த மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு உதிரப்போக்கு அதிகம் ஏற்படுகிறது. இதனால் அப்பெண்களின் உடலில் சத்துகள் குறைந்து மிகவும் சோர்வு உண்டாகிறது. இச்சமயங்களில் வெள்ளரிக்காய்களை அதிகம் சாப்பிட்டு வர பெண்களின் மாதவிடாய் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்குகிறது.

பசிபோக்கி

உணவை சாப்பிட தூண்டும் பசி உணர்வு ஆரோக்கியமான உடலுக்கு அறிகுறியாகும். ஆனால் சிலருக்கு அளவிற்கு அதிகமாக பசி எடுக்கும் நிலை ஏற்பட்டு அதிகம் சாப்பிட்டு உடலாரோக்கியத்தை கெடுத்து கொள்ளும் நிலை உண்டாகிறது. இத்தகைய பிரச்சனை கொண்டவர்கள் அடிக்கடி வெள்ளரிக்காய்களை சாப்பிடுவதால் அதீத பசியுணர்வு ஏற்படாமல் உடல்நலத்தை காக்கும்.

இதையும் படிக்கலாமே:
முலாம் பழம் நன்மைகள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vellarikkai benefits in Tamil. It is also called as Vellarikkai uses in Tamil or Vellarikka payangal in Tamil or Vellarikai gunangal in Tamil or Vellarikkai maruthuva payangal in Tamil.