365 நாளும் மேக்கப் போடாமலேயே வேற லெவல் அழகைப் பெற வெறும் வெள்ளரிக்காய் போதும்.

face2
- Advertisement -

365 நாட்களும் முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும். மேக்கப் போடாமல் கூட, அதாவது இரவு தூங்கி எழுந்து காலையில் கண்விழித்து கண்ணாடியை பார்க்கும்போது கூட நம்முடைய முகம் வாடி இருக்கக் கூடாது. அந்த அளவிற்கு ஒரு பிரகாசமான பொலிவை கொடுக்கக் கூடிய மிக மிக சுலபமான, செலவு குறைவான ஒரு சீரம் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். குறிப்பு இவ்வளவு எளிமையாக உள்ளது. இதை பயன்படுத்தினால் பலன் கிடைக்குமா என்று மட்டும் யோசிக்காதீங்க. 40 வயதை தாண்டியும் நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் இந்த குறிப்பு மிகவும் சிறப்பு.

இந்த சீரம் தயார் செய்ய நமக்கு வெறும் 3 பொருட்கள் போதும். வெள்ளரிக்காய், கற்றாழை ஜெல், கொத்தமல்லி தழை. முதலில் ஒரு பெரிய வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளரிக்காயை சுத்தமாக கழுவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பூச்சி மருந்து அடிக்காத வெள்ளரிக்காய் என்றால், மேலே இருக்கக்கூடிய தோலுடன் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பூச்சி மருந்து தெளித்து விளைவித்த வெள்ளரிக்காய் என்றால் மேலே இருக்கும் தோலை சீவி கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து கற்றாழை ஜெல் நமக்கு தேவை. பிரஷ்ஷான கற்றாழை செடி இருந்தால் அதில் இருந்து சிறிய துண்டை வெட்டி அதன் உள்ளே இருக்கும் வெள்ளை ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் எந்தவிதமான கலரும் வாசனை திரவியமும் சேர்க்காத கற்றாழை ஜெல்லை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். 1/2 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகளை மண் இல்லாமல் தண்ணீரில் போட்டு கழுவிக் கொள்ளுங்கள். கொத்தமல்லி தழையில் லேசான காம்புகள் இருந்தால் தவறு கிடையாது.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து வெட்டிய 1 பெரிய வெள்ளரிக்காய், கற்றாழை ஜெல் 2 ஸ்பூன், 1/2 கைப்பிடி கொத்தமல்லி தழை, இந்த பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் மிக்ஸி ஜாரை விட்டுவிட்டு ஓடி விடுங்கள். வெள்ளரிக்காயில் இருக்கும் தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டால் மிகக் குறைந்த அளவில் இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். மிக்ஸியை ஒரே அடியாக ஓட விட்டு இதை சூடாக்கி விடக்கூடாது.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை ஒரு ஃபில்டரை கொண்டு நன்றாக வடிகட்டி கிடைக்கக்கூடிய சீரமை மட்டும் தனியாக எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஏழு நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதை முகத்தில் எப்படி அப்ளை செய்வது.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த ஜெல்லை லேசாக முகத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிட வேண்டும். இந்த ஜெல்லை நாம் முகத்தில் போட்டு இருப்பதே தெரியாது. கழுத்து பகுதியிலும் மறக்காமல் இதை அப்ளை செய்யுங்கள்.

லேசாக சீரம் அப்ளை செய்வது போல அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள். முகம் காய்ந்துவிடும். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை எழுந்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். பாருங்கள் உங்களுடைய சருமம் எவ்வளவு பொலிவாக இருக்கிறது என்று. குறிப்பாக 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த குறிப்பு அவசியம் தேவைப்படும். தொடர்ந்து இந்த குறிப்பை பின்பற்றி வரலாம் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

- Advertisement -