வீட்டில் இந்த விநாயகர் சிலையை வைத்தால் செல்வம் சேருவது உறுதி

0
1678
Vellerukka Vinayagar
- விளம்பரம் -

பொதுவாகவே வெள்ளெருக்க வேருக்கு சில தெய்வீக சக்திகள் உண்டு. வெள்ளெருக்க வேரைப் பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு சில அபூர்வ சக்திகள் இயற்கையாகவே உண்டு. 12 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வெள்ளெருக்கன் செடி வளர்ந்தால் அதன் வேரில் சுயம்புவாக விநாயகரது வடிவம் தோன்றும் என்று கூறப்படுகிறது.

Vellerukkam

சக்தி வாய்ந்த வெள்ளெருக்க விநாயகர் சிலையை யாராலும் நினைத்தவுடன் செய்துவிட விட முடியாது. அதற்கு சில முறைகள் உள்ளன. பொதுவாக வெள்ளெருக்கன் செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளது. ஆகையால் அதை உடனே வெட்ட கூடாது. நன்கு முற்றி பக்குவப்பட்ட வெள்ளெருக்க செடியை முதலில் கண்டறிந்து அதற்கு சில பரிகார முறைகள் செய்து சில நாட்கள் காத்திருந்த பின்பு தான் அதை வெட்ட வேண்டும். எந்த பரிகாரமும் செய்யாமல் செடியை வெட்டி பிள்ளையாரை செய்வதால் பலன் இல்லை.

- விளம்பரம் -

மழையே இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும் சக்தி வெள்ளெருக்க செடிக்கு உண்டு. அது போல பல் வேறு இடையூறுகளில் இருந்து பல ஆண்டுகள் நம்மை காக்கும் சக்தி வெள்ளெருக்க வேரில் இருந்து செய்யப்படும் விநாயகருக்கு உண்டு. வெள்ளெருக்க விநாயகர் சிலையை வீட்டில் வைத்து பூஜிப்பதன் பயனாக வீடு முழுக்க நேர் மறை ஆற்றல் அதிகரிக்கும், செல்வம் சேரும், வீட்டில் உள்ளவர்களின் செல்வாக்கு உயரும்.

Vellerukka Vinayagar

இந்த காலத்தில் பலர் பணத்திற்காக வெள்ளெருக்க தண்டு கொண்டு பிள்ளையார் செய்து விற்கின்றனர். ஆனால் அது விரைவில் உளுத்து விடும் என்பதே உண்மை. வெள்ளெருக்க வேரால் செய்யப்படும் விநாயகர் சிலைக்கே சக்தி உண்டு.

Vellerukka Vinayagar

இதையும் படிக்கலாமே:
யுகங்கள் கடந்து ராமபிரானின் வாக்கை காப்பாற்றிய ஏழுமலையான்

வெள்ளிருக்க விநாயகரை வீட்டில் செய்ய நினைப்போர், வெள்ளெருக்க செடிக்கு பரிகாரம் செய்து வேறை வெட்டி எடுத்து ஆச்சாரியிடம் கொடுத்து விநாயகரை செய்த பின் வெள்ளிக்கிழமை அன்று வரும் ராகுகாலத்தில் மஞ்சள் கலவையை விநாயகருக்கு பூச வேண்டும். அதன் பிறகு அடுத்த வெள்ளிக்கிழமையில் வரும் ராகு காலத்தில் அரைத்த சந்தனத்தை பூசி நிழலில் காய வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வேருக்கு ஏதேனும் தோஷம் இருந்தால் நீங்கும், விநாயர்கள் சிலையில் இருந்து நல்ல கதிர்வீச்சு வர துவங்கும். இதன் பின்னர் வெள்ளருக்க விநாயகர் சிலையை வீட்டில் வைத்து தினமும் தீப தூபம் காட்டி வழிபடலாம்.