இன்றைய தினம் வைகாசி வெள்ளிக்கிழமை. இதோடு சேர்த்து இந்த நாளுக்கு இன்னும் என்னென்ன சிறப்பு இருக்கிறது தெரியுமா. இன்று மூலம் நட்சத்திரம் இருக்கிறது. இது அனுமன் பிறந்த நட்சத்திரம். வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமனை வழிபாடு செய்ய நம்முடைய மன தைரியம் அதிகரிக்கும். சங்கடங்கள் விரைவில் தீரும்.
ஏனென்றால் இன்று விநாயகருக்கு உகந்த சங்கடகர சதுரத்தையும் இருக்கின்றது. இதுபோல இரு பெரும் சக்தி வாய்ந்த நாயகன்களின் வழிபாட்டை செய்வதற்கு இன்னொரு நாள் நமக்கு அமையுமா என்ன. இந்த நாளில் அனுமன் வழிபாட்டை எப்படி செய்வது? வாழ்வில் இருக்கும் துன்பத்திலிருந்து வெளிவர ஒரு எளிமையான பரிகாரம் இந்த பதிவில் உங்களுக்காக.
வெள்ளிக்கிழமை ஹனுமன் வழிபாடு
பெரும்பாலும் சனிக்கிழமைகளில், வியாழக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது சிறப்பு என்று சொல்லுவார்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய பணம் சம்பந்தப்பட்ட கஷ்டங்களை எதிர் நோக்க, மன பலம் வேண்டும். மன தைரியம் வேண்டும். கடன் சுமையிலிருந்து வெளிவர உங்களுக்கு துணிச்சல் வேண்டும் என்றால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூலம் நட்சத்திரத்தில் நீங்கள் ஹனுமனை கும்பிடுங்கள். எப்படி தெரியுமா.
27 வெற்றிலை எடுத்து அதற்கு நடுவே ஒரு கலிபாக்கு வைத்து சுருட்டி, மஞ்சள் நூலில் மாலையாக கட்டி உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹனுமன் கோவிலுக்கு சென்று அந்த வெற்றிலை மாலையை போட வேண்டும். அனுமனை 27 முறை வளம் வந்து ஹனுமன் சன்னிதானத்திலேயே சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை வைக்க வேண்டும். ஹனுமனை கண் குளிர பாருங்கள். அனுமனை பார்த்து பார்த்து வழிபாடு செய்ய, அனுமனது பலம் உங்களுக்குள் வந்துவிடும்.
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அந்த பிரச்சனையை சுலபமாக எதிர்கொள்ளும் சக்தி கொண்டவர் அனுமன். ஒரு காரியத்தை கையில் எடுத்தால் அது அனுமனுக்கு வெற்றியை மட்டுமே கொடுக்கும். ராமாயணம் கதைகளில் நாம் படித்ததுண்டு பார்த்ததுண்டு. அதேபோல உங்கள் வாழ்விலும் நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடைய வேண்டும், மன தைரியத்தோடு இந்த உலகத்தில் வலம் வர வேண்டும் என்றால் இன்றைய தினம் அனுமன் வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு.
சக்தி வாய்ந்த அனுமன் மந்திரம்
ஓம் ஹம் ஹனுமந்தே நமோ நமஹ !
இந்த மந்திரத்தை முடிந்தால் 108 முறை இன்று அனுமன் கோவிலில் அமர்ந்து உச்சரித்து பாருங்கள். உங்களுக்கு கிடைக்கக்கூடிய மன நிம்மதியை வார்த்தையால் சொல்லவே முடியாது. அதி சக்தி வாய்ந்த இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு சமர்ப்பணம். ஹனுமன் பக்தர்களாக நீங்கள் இருந்தால் இந்த வழிபாட்டை மேற்கொண்டு பலனடையலாம்.
இதையும் படிக்கலாமே: கடன் கரைய கணபதி வழிபாடு
அனுமனுக்கு வெற்றிலை மாலை கட்டி போட முடியவில்லை என்பவர்களாக நீங்கள் இருந்தால், கவலையே படாதீங்க. இந்த மந்திரத்தை அனுமனை மனதார நினைத்து வீட்டில் இருந்தபடி சொன்னாலும் உங்களுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.