வெள்ளிக்கிழமை இரவு உங்கள் வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும். பாவங்கள் நீங்கி, முன்னோர்களின் ஆசிர்வாதமும், தெய்வங்களின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும்.

mhalashmi

இன்றைக்கு வாழ்க்கையில் நாம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றோம் என்றால், அதற்குக் காரணம் நாம் செய்த பாவங்கள் தான். பாவங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை தான். கர்மவினை தீரும்வரை நிச்சயமாக வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. இருப்பினும் செய்த பாவங்களுக்கான விமோசனத்தை பெற அவ்வப்போது சில பரிகாரங்களை செய்து பலன் பெற முடியும் என்பது நம்முடைய முன்னோர்களின் கருத்து. அதற்கேற்றவாறு நமக்கு பல பரிகார முறைகளையும் அவர்கள் சொல்லி வைத்துதான் சென்று உள்ளார்கள். அந்த வரிசையில் நம் பாவத்தை தீர்த்துக் கொண்டு, முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும் தெய்வங்களின் ஆசீர்வாதத்தையும் பெற என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய ஒரு சிறிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

rice

வெள்ளிக்கிழமை இரவு உங்கள் வீட்டு சமையல் அறையில் இந்த ஒரு பரிகாரத்தை செய்யப்போகிறீர்கள். வெள்ளிக்கிழமை இரவு உங்கள் வீட்டு சமையல் அறையை சுத்தம் செய்திருக்க வேண்டும். ஒரு சிறிய கண்ணாடி அல்லது பீங்கான் பவுலை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள். சில்வர் பாத்திரத்தை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு அந்த கிண்ணம் நிரம்ப வெள்ளை சாதத்தை கோபுரமாக வைக்க வேண்டும். அது எச்சில் படாத சாதகமாக இருக்க வேண்டும். முடிந்தால் கொஞ்சம் பச்சரிசி சாதத்தை வடித்து அந்த கிண்ணத்தில் வைப்பது மிக மிக நல்லது. அதாவது நம்முடைய வீட்டில் அன்றாடம் சாப்பாட்டு பானையை கழுவி ஊற்றி வைக்கும் கிண்ணம் அல்ல இது.

kitchen

சுத்தமான எச்சில் படாத சாதகமாக வைக்கத்தான் அந்த சிறிய கிண்ணத்தில் வேண்டும். தண்ணீர் ஊற்றி எல்லாம் வைக்கக் கூடாது. நாம் சாப்பிடுவதற்கு முன்பாகவே, கொஞ்சம் சாதத்தினை போட்டு தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். இரவு சமையலறையை சுத்தம் செய்த பின்பு, உங்களுடைய அடுப்புக்கு அருகில் இந்த கிண்ணத்தை மூடாமல் திறந்த படி அப்படியே வைத்து விடுங்கள். (சிறிய கிண்ணமாக இருந்தாலும் சரி, அது நிரம்ப சாதம் இருக்க வேண்டும். சாதம் குறைவாக இருக்கக் கூடாது.)

மறுநாள் சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு முன்பாக இந்த சாதத்தை எடுத்து கொஞ்சமாக கருப்பு எல் கலந்து காகத்திற்கு வைத்துவிட வேண்டும். காகத்திற்கு வைக்க முடியவில்லை என்றாலும் பசு மாடு நாய் இப்படி வாயில்லா ஜீவன்களுக்கு இந்த சாதத்தை காலை ஏழு மணிக்கு முன்பாகவே வைத்துவிடுங்கள். இப்படி வெள்ளிக்கிழமை இரவு சமையலறையில் வைத்த சாதத்தை மறுநாள் காலை எக்காரணத்தைக் கொண்டும் வீட்டிலுள்ளவர்கள் உண்ணக்கூடாது.

kamatchi-amman9

வெள்ளிக்கிழமை இரவு உங்களுடைய வீட்டிற்கு வருகை தரும் முன்னோர்களும், வருகை தந்த தெய்வங்களும் அந்த சாதத்தை பார்த்து மனம் மகிழ்ந்து திருப்தி அடைவார்கள். அந்த சாதம் பிரசாதத்திற்கு இணையானது என்று கூட சொல்லலாம். வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டு சமையலறையில் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய பாவங்கள் நீங்கும். கர்மவினைகள் குறைக்கப்படும். உங்களைப் பிடித்த கஷ்டங்கள் படிப்படியாக குறையும். குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் பித்ருக்களின் ஆசீர்வாதம் ஒரு சேர கிடைக்கும். பல நன்மைகள் உங்கள் வாழ்க்கையில் நடக்க இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.