- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு

வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு

- Advertisement -

இன்று ஆடி மாதம் வெள்ளிக்கிழமையுன் சேர்த்து பிரதோஷமும் வந்திருக்கிறது. இதுபோல ஒரு அற்புதமான நாள் மீண்டும் நமக்கு கிடைக்காது. இந்த நாளை யாரும் தவற விடாதீர்கள். வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்து வழிபாட்டை மேற்கொள்ளவும். குறிப்பாக சுக்கிர திசை யாருக்கெல்லாம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, அவர்கள் எல்லாம் இன்று சிவசரிசனம் கட்டாயம் பிரதோஷ நேரத்தில் செய்ய வேண்டும்.

சர்பதோஷம், நாகதோஷம் உள்ளவர்கள் எல்லாம் இன்று நீல நிற சங்கு பூவை கொண்டு போய் சிவபெருமானுக்கு கொடுத்து உங்க கையால் வில்வ இலை மாலையை கட்டி சிவனுக்கு போட்டால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். தோஷத்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் வராது. இது மிக மிக சக்தி வாய்ந்த பரிகாரம். தோஷம் உள்ளவர்கள், வாய்ப்பு உள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு

இது தவிர உங்களுடைய வாழ்க்கையில் செல்வ வளம் உயர வேண்டும், மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும் என்றால், இன்று மாலை பிரதோஷ நேரத்தில் நீங்கள் சிவபெருமானுக்கு எதை பிரசாதமாக செய்து கொடுக்க வேண்டும். எலுமிச்சை பழ சாதம். இன்று மாலை பச்சரிசியை வேக வைத்து வடித்து, அதில் எலுமிச்சம் பழ சாதத்தை கலவை சாதமாக தயார் செய்து கொள்ளுங்கள். நிறைய சாதம் செய்ய வேண்டாம். ஒரு டம்ளர் அளவு பச்சரிசியில் நீங்கள் இந்த எலுமிச்சை பழ சாதத்தை தயார் செய்தாலே போதும்.

இந்த பிரசாதத்தை வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அந்த சிவபெருமானுக்கு நெய் வைத்தியம் செய்ய வேண்டும். சில கோவில்களில் இதை உள்ளே கர்ப்ப கிரகத்திற்கு எடுத்துச் சென்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்வார்கள். சில கோவில்களில் இதற்கு அனுமதி இருக்காது. அனுமதி இல்லை என்றாலும் பரவாயில்லை.

- Advertisement -

நீங்கள் பிரசாதத்தை கொண்டு போய் நெய்வேதியத்துக்கு கொடுக்க வேண்டாம். கோவிலுக்கு வெளியிலேயே சிவபெருமானை நினைத்து இந்த பிரசாதத்தை சிவபெருமானுக்கு கொடுப்பதாக  மனசீகமாக வேண்டிக் கொள்ளுங்கள். தொண்ணையில் இந்த பிரசாதத்தை வைத்து அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இதை நீங்கள் விநியோகம் செய்து விட வேண்டும். கோவில் வாசலில் யாசகம் கேட்பார்கள் அவர்களுக்கு இந்த பிரசாதத்தை கொடுத்தீர்கள் என்றால் மேலும் சிறப்பு வாய்ந்த பலனை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகம் தரும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை

குடும்பத்தில் தீராத துன்பம், கணவன் மனைவி சண்டை, கடன் பிரச்சனை, குழந்தையின்மை, திருமணம் நடக்கவில்லை, வருமானம் இல்லை, கணவருக்கு நல்ல வேலை இல்லை, அப்படி எந்த பிரச்சனை இருந்தாலும், அதை சரி செய்ய இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் உதவும். இன்னும் நேரம் இருக்கிறது மாலை 4:30 மணியிலிருந்து 6 மணி வரை தான் பிரதோஷ நேரம். 6:00 மணிக்கு மேல் தான் பிரசாதம் விநியோகம் செய்வார்கள். இதற்குள் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்ய வாய்ப்பு கிடைத்தவர்கள் செய்து பலன் பெறலாம்.

சற்று முன்