வெள்ளிக்கிழமை அன்று வீட்டுப் பெண்களின் கையால் ஒரு போதும் இந்த தவறை மட்டும் செய்யவேக் கூடாது. இப்படி செய்தால் மகாலட்சுமி கடாட்சம் வீட்டில் குறைந்துபோகும்.

uppu
- Advertisement -

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இந்த வெள்ளிக்கிழமை பெண்கள் தங்களுடைய கைகளால் தவறியும் இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடக்கூடாது. அது என்ன தவறு? என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது உப்பு. இந்த உப்பினை ஒருபோதும் நம்முடைய வீட்டில் வீணாக்கக்கூடாது. அந்த உப்பை எடுத்து பயன்படுத்தும் போது கூட மனதில் எப்போதுமே ஒரு பய பக்தி இருக்க வேண்டும். சிந்தாமல் சிதறாமல் உப்பை எந்த ஒரு பெண், தன்னுடைய வீட்டில் கையாளுகின்றாராரோ அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் குடிகொண்டிருக்கும் என்பது தான் அர்த்தம்.

uppu

இயல்பாகவே உப்பை மட்டுமல்ல, எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை வீட்டுப் பெண்கள் கையாளும்போது ஜாக்கிரதையாகத் தான் கையாள வேண்டும். அந்த பொறுப்புணர்வு, அந்த வீட்டின் உடைய முன்னேற்றத்திற்கு துணையாக நிற்கும். சரி, வெள்ளிக்கிழமை அன்று உப்பை வைத்து என்ன தவறை செய்யக்கூடாது. மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பெண்கள், இந்த கல் உப்பை ஒரு போதும் வெள்ளிக்கிழமை அன்று எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீரில் கரைக்க கூடாது.

- Advertisement -

நிறைய பேர் இந்த கல் உப்பைத் திருஷ்டி கழிக்க பயன்படுத்துவார்கள். மற்ற கிழமைகளில் திருஷ்டி கழித்து கல் உப்பை தண்ணீரில் கரைக்கலாம். செவ்வாய்க்கிழமை அன்று கூட திருஷ்டி சுற்றி தண்ணீரில் கல் உப்பை போடலாம். ஆனால், வெள்ளிக்கிழமை அன்று மட்டும் பரிகாரத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி, கண் திருஷ்டிக்காக இருந்தாலும் சரி, அந்த உப்பை தண்ணீரில் கரைக்க வைக்காதீர்கள்.

mahalashmi3

சிலபேர் சூழ்நிலையின் காரணமாக வெள்ளிக்கிழமை வீடு துடைக்க வேண்டிய கட்டாயம் வரும். அப்போது வீடு துடைக்கும் தண்ணீரில் எக்காரணத்தை கொண்டும் கல் உப்பை போட்டு கரைத்து வீடு துடைக்க கூடாது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்றும் கல் உப்பை தண்ணீரில் போட்டு வீடு துடைக்க கூடாது. வீட்டில் கட்டாயம் எதிர்பாராத பிரச்சனைகள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

- Advertisement -

வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரையில் புது உப்பை கடைக்கு சென்று வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. கொஞ்சமாக கல் உப்பை வாங்கி புதியதாக பூஜை அறையில் வைத்து பராமரித்து வரலாம். அந்தக் கல் உப்பிலிருந்து வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று, ஒரு சிறிய மஞ்சள் துணியில், கல் உப்பைப் போட்டு முடிந்து மகாலட்சுமி பாதங்களில் வைத்து விடுங்கள்.

yellow-saree

இந்த முடிச்சை போடும் போது உங்களது வேண்டுதலை ஆழமாக அழுத்தமாக அந்த ஆண்டவனிடம் வைக்க வேண்டும். இந்த வெள்ளிக்கிழமை, உப்பை முடிந்து வைத்தால், அடுத்த வியாழக்கிழமை அன்று அதை எடுத்து தண்ணீரில் போட்டு கரைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை கட்டாயமாக்க தண்ணீரில் கரைக்க கூடாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

manjal-mudichu

தொடர்ந்து ஒரு வேண்டுதல் நிறைவேறும் வரை, அதே வேண்டுதலை வைத்து இந்த முடிச்சை மகாலட்சுமி பாதங்களில் கட்டி வைத்துக் கொண்டே வந்தால் அந்தப் பிரச்சனைக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைப்பதை நிச்சயம் உங்களால் உணரமுடியும். நம்பிக்கையோடு செய்தால் மட்டும். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -