வெள்ளி கொலுசுக்கு காசு கொடுத்து பாலிஷ் போட வேண்டாம்! 10 பைசா செலவில்லாமல் கறுத்து போன கொலுசை எப்படி புத்தம் புதிதாக மாற்றுவது?

kolusu-cleaning-coconut-shell
- Advertisement -

கொலுசு என்றாலே அது வெள்ளியால் செய்யப்பட்டதாக இருக்கிறது. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து பெண்களுமே கொலுசு அணிவதை விரும்புகிறார்கள். கொலுசு அணிவதால் உண்டாகக்கூடிய சத்தம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். காலம் காலமாக அணிந்து வரும் இந்த வெள்ளி கொலுசு விரைவாகவே அதன் நிறத்தை இழந்து, கறுத்து போய்விடுகிறது. இப்படி கறுத்துப் போன வெள்ளிக் கொலுசை எப்படி காசு கொடுத்து பாலிஷ் போடாமல், வீட்டிலேயே வாங்கிய புதிதில் இருந்தது போல பளிச்சென மாற்றுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வெள்ளி கொலுசை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. குறிப்பாக சிலர் அதிக முத்துக்கள் இருக்கும் கொலுசை தேர்ந்தெடுத்து ஆசை ஆசையாக அணிந்து கொள்வார்கள். முத்துக்களின் ஓசை மனதிற்கு புது உற்சாகத்தை கொடுக்கும். எப்பொழுதும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கக்கூடிய இந்த சத்தம் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது.

- Advertisement -

இப்படி அதிக முத்துக்கள் இருக்கும் கொலுசை வாங்கி அணியும் பொழுது வெகு விரைவாகவே அழுக்குகள் இடுக்குகளில் சேர்ந்து கறுத்துப் போய் விடுகிறது. நல்ல கனமான வெள்ளி கொலுசுகள் கறுத்து போனால் அதை சுத்தம் செய்வது ரொம்பவே கடினமாகிவிடும். இதற்காக காசு கொடுத்து வெளியில் பாலிஷ் செய்து கொள்வது உண்டு. இப்படி வெள்ளி கொலுசை பாலிஷ் செய்யாமல், நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப எளிதாக புத்தம் புதிதாக வாங்கிய நகை போல சுத்தம் செய்து கொள்ளலாம்.

முதலில் வெள்ளி கொலுசை சாதாரணமாக நீங்கள் பழைய டூர் பிரஷை கொண்டு சோப்பால் தேய்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். இரண்டாவதாக அடுப்பில் ஒரு ட்ரையான கொட்டாங்குச்சி ஒன்றை வையுங்கள். இது நன்கு பற்றி எரிந்து சாம்பலாக வேண்டும். இந்த கொட்டாங்குச்சி எரிந்த சாம்பலில் இருந்து கிடைக்கக்கூடிய கரியை பொடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை சலித்து தூளாக எடுத்துக் கொள்ளுங்கள். கொட்டாங்குச்சியில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த சாம்பல் தூளில் வெள்ளி நகைகளை சுத்தம் செய்யக்கூடிய ஆற்றல் உண்டு.

- Advertisement -

ஒரு ஸ்பூன் அளவிற்கு இந்த கொட்டாங்குச்சி கரித்தூளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். பின் பாத்திரம் கழுவும் லிக்விட் அல்லது வீடு துடைக்கும் லிக்விட் இருந்தால் அதிலிருந்து ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவை ஒரு பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின்னர் கொலுசு முழுவதும் எல்லா இடங்களிலும் படும்படி பழைய டூத் பிரஷை வைத்து தேய்த்து விடுங்கள். ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊறிப் போகட்டும்.

பத்து நிமிடம் கழித்து எடுத்து சாதாரண தண்ணீரால் முதலில் அலசி கொள்ளுங்கள். பின்னர் இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் கரி மற்றும் அழுக்குகளை போக்குவதற்கு ஒரு வெதுவெதுப்பான தண்ணீரை பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொலுசுகளை போட்டு ஒரு ஸ்பூன் கல் உப்பு மற்றும் அரை முடி எலுமிச்சை சாற்றை கலந்து ஊறவிட்டு விடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் அதை எடுத்து பார்த்தால் நம்முடைய கொலுசா? என்று கேட்கும் அளவிற்கு நிறம் மாறி இருக்கும். பின்னர் சாதாரண ஷாம்பூ அல்லது பாத்திரம் கழுவ பயன்படுத்தும் லிக்விடை தொட்டு ஒரு முறை கடைசியாக பிரஷ் செய்து கொள்ளுங்கள். இதனால் இண்டு இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் கரி துகள்கள் வெளியில் வரும். அதன் பிறகு தண்ணீரால் நன்கு அலசி விடுங்கள், நீங்கள் புதிதாக எப்படி வாங்கும் பொழுது இருந்ததோ, அதே மாதிரி இப்பொழுதும் மின்னும்.

- Advertisement -