நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல், கறுத்து போன உங்க பழைய கொலுசை சட்டுனு புதுசு போல மாத்தணுமா? அட அதுக்கு நிறைய வழி இருக்குங்க வாங்க தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

பெண்கள் அணியும் அணிகலன்களிலே அழகானது இந்த கொலுசு தான். இது பெண்களுக்கு மட்டுமின்றி குழந்தைகள் கூட அவர்களின் காலில் கொலுசு, தண்டை போன்றவைகளை அணிந்து நடக்கும் போது, அந்த நடை அழகும் அதன் சத்தமும் பார்க்கவும், கேட்கவும் மனதிற்கு இதமாக இருக்கும். இப்படி அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகளான இந்த கொலுசை, எந்த அளவிற்கு ஆசைப்பட்டு வாங்கி அணிந்து சந்தோஷப்படுகிறோமோ அதே அளவு அக்கறையுடனும் பராமரிக்க வேண்டும். கொலுசு மட்டும் மற்ற பொருட்களை விட சீக்கிரமே கறுத்து விடும் அதை சுத்தப்படுத்துவதும் கொஞ்சம் கடினம் தான். கடைகளில் கொடுத்தால் வெள்ளியின் மதிப்பு குறைந்து விடும் என்று அச்சமும் இருக்க தான் செய்கிறது. இனி அந்த கவலையை விட்டு விட்டு வீட்டிலே சுலபமாக இந்த கொலுசை சுத்தம் செய்ய இந்த குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

குறிப்பு:1
இப்பொழுதெல்லாம் மாத்திரையை பயன்படுத்தாத வீடுகளே இல்லை. மாத்திரை தீர்ந்தவுடன் மாத்திரை அட்டைகளை தூக்கி தூர போடாமல் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்(அலுமினியும் கோட்டின் உள்ள மாத்திரை அட்டை மட்டும் தான் இதற்கு தேவை}. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்த பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மாத்திரை அட்டைகளை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து விடுங்கள். அதன் பிறகு கறுத்து போன உங்கள் வெள்ளி கொலுசை அதில் சேர்த்து கொஞ்சம் சமையல் உப்பை சேர்த்து பத்து நிமிடம் வரை கொதிக்க வைத்து அதன் பிறகு தண்ணீரிலிருந்து கொலுசை எடுத்து தேய்த்து பாருங்கள் உங்கள் கொலுசு புதுசு போலவே மின்னும்.

- Advertisement -

குறிப்பு:2
இந்தக் குறிப்பு அனைத்திலும் விட மிக மிக சுலபமானது. இதில் பயன்படுத்தக்கூடிய பொருள் நம் வீட்டில் இருக்கும் ஹேண்ட் வாஷ். இந்த ஹேண்ட் வாஷை உங்கள் கொலுசுகளின் மீது தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து தேங்காய் நார் கொண்டு தேய்க்க வேண்டும். இப்படி தேய்க்கும் போது கொலுசின் இடுக்குகளில் உள்ள அழுக்கு மொத்தமும் வெளியேறி விடும், இது மிக மிக எளிமையான முறையும் கூட.

குறிப்பு:3
வெள்ளி கொலுசுகளை வாங்கி அதிக நாள் கருகாமல் இருக்க, வாங்கிய உடனே அதில் தண்ணீர் நிறத்தில் இருக்கும் நெயில் பாலிசை, இந்த கொலுசு, மெட்டி போன்ற வெள்ளி அணிகலன்களின் மீது ஒரு கோட்டின் அடித்து வைத்து விடுங்கள். இப்படி செய்தால் அதிக நாட்களுக்கு இந்த வெள்ளிப் பொருட்கள் கருக்காமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு:4
வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்ய இன்னொரு எளிமையான வழிமுறையும் உண்டு. இதற்கு தேவையானது பல்பொடி தான். ஆனால் இதற்கு கோல்கேட் பவுடர் அல்லது கோபால் பல்பொடி தான் பயன்படுத்த வேண்டும். இந்த பல் பொடியை எடுத்து கொலுசின் மீது எல்லா பக்கமும் படும்படி தேய்த்து வைத்து விடுங்கள். 10 நிமிடம் கழித்து வெறும் பிரஷ் வைத்து தேய்த்து எடுத்தால் போதும். தண்ணீர் எதுவும் பயன்படுத்தக் கூடாது, அதன் பிறகு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் ஏதாவது வைத்து துடைத்து விடுங்கள். கொலுசில் உள்ள அழுக்கு எல்லாம் நீங்கி கொலுசு பளிச்சென்று மாறி விடும்.

குறிப்பு:5
வீட்டில் கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏற்றிய பிறகு அதன் துகளை கீழே கொட்டாமல் அதை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாம்பிராணி தூள் ஒரு ஸ்பூன் அதனுடன் ஒரு ஸ்பூன் நல்ல புளித்த தயிரை சேர்த்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் கறுத்துப் போன கொலுசுகளின் மீது தேய்த்து வைத்து விடுங்கள். 10 நிமிடம் கழித்து தேய்த்துப் பாருங்கள் கடையில் கொடுத்து பாலிஷ் போட்டது போலவே இருக்கும்.

குறிப்பு:6
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் வாஷிங் துணி துவைக்கும் பவுடர் இரண்டையும் சேர்த்த பிறகு கறுத்து போன கொலுசை அதில் சேர்த்து அடுப்பில் அனுப்பி விடுங்கள். 10 நிமிடம் இந்த வெந்நீரிலே கொலுசு இருக்கட்டும், அதன் பிறகு கொலுசை நீரில் இருந்து எடுத்து ஒரு பிரஷ் வைத்து லேசாக தேய்த்து விடுங்கள். இப்படி தேய்ப்பதன் மூலம் இடுக்குகளில் உள்ள அழுக்கு எல்லாம் வெளியேறி விடும். அதன் பிறகு பாருங்கள் உங்கள் கொலுசு புதுசு போல மின்ன ஆரம்பித்து விடும்.

ஆசையாய் வாங்கி அணியும் ஒரு பொருளை எப்போது பார்த்தாலும் மனதிற்கு இதமாய் இருக்க வேண்டும் என்றால், அந்த பொருளை பார்க்கும் போதே பளிச்சென்று இருக்க வேண்டும். இனி கொலுசு கொஞ்சம் நிறம் மாறும் போது இந்த குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள் உங்கள் கொலுசு அதிக நாட்களுக்கு புதுசு போலவே மின்னும்.

- Advertisement -