இருளில் மூழ்கி இருக்கும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. காரணம் உங்கள் தலையெழுத்தை தாண்டி, உங்கள் ஜாதக கட்டத்தை தாண்டி, உங்கள் கஷ்டங்களில் இருந்து நீங்கள் மீண்டு எழுந்து வர வேண்டும். இதற்கான தீர்வை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கண்டுபிடிக்க முடியாது.
ஆனால், இதற்கு எளிமையாக ஆன்மீகத்தில் ஒரு வழிபாடு உள்ளது. முருகன் வழிபாடு தான். நாளை மறுநாள் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை. இந்த நாளில் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். உங்கள் வாழ்வில் இருக்கும் தீராத ஒரு துன்பம் நிச்சயம் அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்ந்துவிடும். புரட்டாசி மூன்றாவது வெள்ளிக்கிழமை உங்கள் வாழ்வும் பிரகாசமாக மாறியிருக்கும்.
புரட்டாசி பெருமாள் வழிபாடு தானே சிறந்தது? முருகர் வழிபாடும் சிறந்தது தான். அது இந்த வழிபாட்டை செய்த பிறகு உங்களுக்கே புரியும். நம்பிக்கையோடு அந்த பரிகாரத்தை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை மூலம் தெரிந்து கொள்வோம்.
வெள்ளிக்கிழமை வேல் வழிபாடு
இந்த வழிபாட்டிற்கு கட்டாயம் வேல் தேவை. உங்களுடைய வீட்டில் சின்ன வேல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் மெல்லிசாக கூட வேல் தற்போது கடைகளில் விற்கிறது. அதை வாங்கி கூட இந்த வழிபாட்டிற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வேலை பூஜை அறையில் பிரதிஷ்டை செய்து கொள்ளுங்கள். ஒரு பித்தளை சொம்பில் பச்சரிசி நிரப்பி அதில் இந்த வேலை சொருகி வைக்க வேண்டும். வாரம் தோறும் ஒரு நாள் இந்த வேலுக்கு பால் அபிஷேகமும் அல்லது சந்தன அபிஷேகமோ அல்லது வெறும் தண்ணீரில் அபிஷேகமும் செய்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை அந்த வேலுக்கு அபிஷேகம் செய்து சந்தன குங்குமப்பொட்டு வைத்து, பூஜை அறையில் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வேலுக்கு ஒரு பூ வைக்க வேண்டும். கூர்மையான பகுதியில் கொஞ்சம் பூ அல்லது ஒரு எலுமிச்சம் பழத்தை சொருகி வைப்பது நல்லது. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வேலுக்கு முன்பாக அமர்ந்து முருகா என்னுடைய கஷ்டத்தை தீர்த்து வை என்று சரணாகதியோடு வேண்டுதல் வைக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் வேல்மாறல் ஒலிக்கப்பட வேண்டும். இந்த எல்லா வழிபாடும் வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும்.
வேல்மாறல் உங்கள் காதில் கேட்டுக் கொண்டே இருக்கட்டும். நீங்கள் அந்த வேல்மாறலை படிக்க வேண்டும் என்ற கட்டாயம் கூட கிடையாது. உங்கள் வீட்டில் வேல்மாறல் கைபேசியில் பாடிக்கொண்டே இருக்கும் போது, முருகனை மனம் உருகி வழிபாடு செய்யுங்கள். ‘சண்முகா, முருகா, கந்தா, கடம்பா, கதிர்வேலா, வேலவா’ என்று உங்களுக்கு முருகனை எந்த வார்த்தையை சொல்லி கூப்பிட்டால் ரொம்ப பிடிக்குமோ, அந்த வார்த்தையை சொல்லி வழிபாடு செய்து எங்கள் கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளிக்கிழமை தோறும் முருகனை இப்படி வழிபாடு செய்தால் உங்கள் வாழ்வில் இருக்கும் இருள் நீங்கும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் உண்டு. இந்த வெள்ளிக்கிழமை உங்கள் வாழ்க்கையில் இருளை நீக்கி வெளிச்சத்தை கொண்டு வரப்படும் வெள்ளிக்கிழமை என்பதை மறக்காதீங்க. சின்ன வேல் வாங்கி இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர தேய்பிறை அஷ்டமி மந்திரம்
தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் இந்த வழிபாட்டை செய்து முடித்துவிட்டு, தொடர்ந்து உங்களால் வீட்டில் வேல் வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் அந்த வேலை கொண்டு போய் முருகன் கோவில் உண்டியலில் செலுத்தலாம் எந்த தவறும் கிடையாது. இதற்கு தேவையான வேலைகளை நாளைய செய்ய தொடங்குங்கள். வெள்ளிக்கிழமை பூஜை செய்ய உங்கள் வாழ்வு புது பொலிவுடன் துவங்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.