- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டம் தீர தேய்பிறை அஷ்டமி மந்திரம்

கஷ்டம் தீர தேய்பிறை அஷ்டமி மந்திரம்

- Advertisement -

எண்ணி அடங்கா கஷ்டத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு 8 நிமிடத்தில் விடுதலை அளிக்க போகும் எளிமையான பரிகாரம் தான் இது. எண்ணில் அடங்கா கஷ்டங்களில், நிச்சயம் உங்கள் பண கஷ்டம் தான் முதலில் நிற்கும். கடன் கஷ்டம் தான் முதலில் நிற்கும். இந்த பண பிரச்சனைக்கும் சேர்த்துதான் இந்த பரிகாரம். அதேபோல வீட்டில் கண் திருஷ்டி பிரச்சனை இருக்கிறது.

ஏவல் பில்லி சூனிய பிரச்சனை இருக்கிறது, எதிரிகளால் தொல்லை இருக்கிறது என்பவர்களும், இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். இன்று தேய்பிறை அஷ்டமி திதி. வாழ்வில் வளம் பெற ஒவ்வொருவரும் இந்த நாளில் பைரவர் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு.

- Advertisement -

இன்று 8 எண்ணிக்கையில் இருக்கும் படி குலோப் ஜாமுன் வாங்கிக் கொள்ளுங்கள். எட்டு எண்ணிக்கைக்கு குலோப் ஜாமுன் குறைவாக இருக்கக் கூடாது. அதிகமாக வாங்கினால் தவறு கிடையாது. இதை அப்படியே பைரவர் சன்னிதானத்திற்கு கொண்டு சென்று பைரவர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். பைரவர் கோவிலிலேயே அமர்ந்து இந்த மந்திரத்தை 8 முறை சொல்லுங்கள்

பைரவர் மந்திரம்

ஓம் ஹ்ரீம் மகா பைரவாய நமஹ !

- Advertisement -

வெறும் ஒரு வரி மந்திரம் தான். எட்டு முறை மட்டும் சொன்னால் போதும். பிறகு அந்த குலோப் ஜாமுனை நீங்கள் மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும். கடன்சுமை எல்லாம் குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த குலோப் ஜாமுனை கொண்டு போய் கோவிலுக்கு வெளியில் யாசகம் கேட்கும் ஏழைகளுக்கு ஒவ்வொன்றாக உங்கள் கையால் எடுத்து தானம் கொடுத்து விடுங்கள்.

இந்த நாளோடு உங்களுடைய பிரச்சனை நிச்சயம் தீரும். இது ஒரு எளிமையான பரிகாரம்தான். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நல்லது நடக்கும் அது மட்டுமில்லாமல் ஏழரை சனியால் பிரச்சனை இருப்பவர்கள் சனி பகவான் தோஷம் தாக்கப்பட்டவர்கள் சனி திசை நடப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் நன்மையை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: வலம்புரி சங்கு வழிபாடு

குலோப் ஜாமுன் வாங்கி செல்ல வேண்டுமா வேறு இனிப்பு பொருட்கள் தானம் கொடுக்கக் கூடாதா, என்று கேட்க வேண்டாம். ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்காது கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையோடு மட்டும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். அந்த பைரவர் உங்களுடைய கஷ்டங்களை உடனடியாக தீர்த்து வைப்பார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்