இன்னும் ஒரு சில நாட்களில் ஆடி மாதம் பிறக்கவிருக்கின்றது. பூஜை அறையில் இருக்கும் வெள்ளி பாத்திரங்களை பளபளப்பாக தேய்த்து, புதுசு போல மாற்றி மஞ்சள் குங்கும பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அதில் கிடைக்கும் மனநிறைவு அபரிவிதமானது. இதை வார்த்தையால் சொல்லி யாருக்கும் புரிய வைக்க முடியாது.
நீண்ட நாட்களாக பூஜை அறையில் இருக்கும் வெள்ளி விளக்கு, மற்ற வெள்ளி பாத்திரங்கள் எல்லாம் கருப்பு நிறம் படிந்து பிசுபிசுப்பு தன்மையோடு இருக்கும். அதை குறைந்த விலையில் எளிமையாக நாமே சுத்தம் செய்து கொள்ள ஒரு வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.
வெள்ளி விளக்கை சுத்தம் செய்ய வீட்டு குறிப்பு
இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் ஆப்ப சோடா 3 ஸ்பூன், உப்பு 3 ஸ்பூன், அலுமினிய பாயில் பேப்பர் 2, தேவையான அளவு பாத்திரம் தேய்க்கும் லிக்விட். அவ்வளவுதான். அலுமினியம் ஃபாயில் பேப்பர் கடைகளில் கிடைக்கும். உணவு பொருட்களை பேக் செய்ய பயன்படுத்துவார்கள் அல்லவா. அதிலிருந்து 3 கப் அல்லது 4 கப் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். சின்ன அலுமினியம் ஃபாயில் கப் இரண்டிலிருந்து மூன்று ரூபாய்க்குள் உங்களுக்கு கிடைக்கும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி, அடுப்பில் சூடு செய்யுங்கள். சூடான தண்ணீரில் ஆப்ப சோடா, உப்பு, அலுமினிய பாயில் கப் 2, போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். கொதிக்கும் தண்ணீரில் வெள்ளி பாத்திரங்களை போட்டு 5 நிமிடங்கள் மீண்டும் அந்த வெள்ளி பாத்திரங்களை சுடுதண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அடுப்பை அணைத்துவிட்டு உடனடியாக இந்த பாத்திரங்களை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு விடவும். பாத்திரம் தேய்க்கும் லிக்விடை, புது பல் தேய்க்கும் பிரஷ்சால் தொட்டு விளக்கை தேய்த்தீர்கள் என்றால், விளக்குக்கு இடுக்கில் இருக்கும் கருப்பு நிறம் கூட எளிதாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய வெள்ளி பாத்திரங்கள் எல்லாம் புதுசு போல மாறிவிடும்.
வெள்ளி விளக்கை சுத்தம் செய்வது போலவே உங்க பூஜையறையில் இருக்கும் மற்ற வெள்ளி சாமான்களையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருமுறை இந்த குறிப்பை பின்பற்றி உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் வெள்ளி பூஜை பொருட்களை சுத்தம் செய்தால் பூஜை பொருட்கள் புதுசு போலவே பல பலப்பாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: ஆஷாட நவராத்திரியில் வெள்ளிக்கிழமை பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்
இதே போல நீங்கள் அணிந்திருக்கும் வெள்ளி செயின், மோதிரம், கொலுசு, இந்த பொருட்களையும் எளிமையாக வீட்டில் இருந்தபடியே சுத்தம் செய்து கொள்ளலாம். தேவைப்படுபவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும். நிறைவான பூஜை செய்த பலனும் கிடைக்கும். பூஜை அறையில் இந்த விளக்கை பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஒரு மனதிருப்தியும் ஏற்படும். ஸ்மார்ட் இல்லத்தரசிகளுக்கு தேவையான, ஸ்மார்ட் வீட்டு குறிப்பு பிடிச்சவங்க, உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்டயும் இந்த குறிப்பு ஷேர் பண்ணுங்க.