வெள்ளிக்கிழமை அன்று நிலை வாசல் படியில் இதை மட்டும் செய்தால் போதும். சுபிட்சத்தை அள்ளிக் கொடுக்க லட்சுமிதேவி உங்கள் வீட்டைத் தேடி வந்து விடுவாள்.

door-vasal-lakshmi
- Advertisement -

ஒரு வீடு லட்சுமி கடாட்சத்துடன் தான் இருக்கின்றதா என்பதை தெரிந்துகொள்வதற்கு அந்த வீட்டின் நிலை வாசல் படியே ஒரு உதாரணம். ஒரு வீட்டிற்குள் நுழையும் போதே கண்டுபிடித்துவிடலாம். அந்த வீடு சுத்தமாக உள்ளதா. மங்களகரமாக உள்ளதா என்பதை. உதாரணத்திற்கு நாமே ஒரு வீட்டிற்கு செல்கின்றோம். அந்த வீட்டில், நிலை வாசல்படி சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து மாவிலை தோரணங்கள் கட்டி இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டிற்குள் மனிதர்களாகிய நாம் நுழையும் போதே நமக்கு மனது நிறைவு பெறுகின்றது. அப்படி இருக்கும்போது மகாலட்சுமி அந்த வீட்டில் எப்படி நுழையாமல் இருப்பாள்.

ஒரு வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடி கொண்டிருக்க வேண்டும். வீடு செழிப்பாக சுபிட்சத்துடன் இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் வெள்ளிக்கிழமை நிலை வாசலில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை வேளைகள் எல்லாவற்றையும் நாம் இப்போது வியாழக்கிழமை அன்றே முடிந்து விடுகின்றோம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. இருப்பினும் உங்கள் நிலை வாசப்படிக்கு செய்ய வேண்டிய வேலைகளை மட்டும் வெள்ளிக்கிழமையில் செய்வது நன்மை தரும்.

mahalakshmi

அதாவது வீட்டில் இருக்கும் பெண்ணும், மகாலட்சுமிக்கு இணையாக சொல்லப்பட்டு உள்ளார்கள். அந்த மகாலட்சுமி குடிகொண்டிருக்கும் இடம் நிலைவாசல். வீட்டிலிருக்கும் பெண் எப்படி வெள்ளிக்கிழமை காலை வேளையில் சுத்தமாக குளித்துவிட்டு மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து தலையில் பூவைச் சூடிக் கொள்கிறாளோ, அதற்கு இணையாக வெள்ளிக்கிழமை அன்று காலை நேரத்தில் நீங்கள் நிலை வாசல் படிக்கு அலங்காரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

பெரியதாக ஒன்றும் இல்லை. வெறும் ஈரத்துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஈரத்துணியில் நில வாசலை சுத்தமாக துடைக்க வேண்டும். கீழே இருக்கும் வாசல் காலை மட்டும் துடைத்தால் பத்தாது. வாசல் சட்டம் நான்கு பக்கத்தையும் சுத்தமாக துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஈரத் துணியில் துடைத்த உடன், மீண்டும் ஒருமுறை காய்ந்த காட்டன் துணியை வைத்து ஈரத்தை சுத்தமாக துடைத்து எடுத்துவிடுங்கள். வாசல்கால் நன்றாக உலர்ந்ததும் உங்கள் வீட்டு வழக்கப்படி நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசலுக்கு இரண்டுபக்கமும் பூ வைத்து, மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு, வாசல் காலுக்கு மேலே ஒரு மாக்கோலம் போட்டு, அதன் பின்பு பூஜை அறைக்கு வந்து வெள்ளிக்கிழமை பூஜையை செய்ய வேண்டும்.

vasal-kathavu

வெள்ளிக்கிழமை பூஜையை நிறைவு செய்துவிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து மனதார குலதெய்வத்தையும், காவல் தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு அந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் தடவி அதை உங்களுடைய நிலைவாசல் இரண்டு பக்கமும் வைத்து விடுங்கள் போதும். உங்களுடைய வீட்டிற்கு எந்த ஒரு பெரிய கஷ்டமும் நுழையாது. உங்கள் வீடு தெய்வ சக்தியின் பாதுகாப்பில் இருக்கும்.

lemon1

அறிவியல் ரீதியாகப் பார்த்தால் மஞ்சள் குங்குமம் ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது. எலுமிச்சம்பழத்தில் இருந்து வெளிவரக் கூடிய வாசம், கெட்டதை தன்னுள் இழுத்துக் கொள்ளும். எந்த ஒரு நோய் நொடிகளையும் நம் வீட்டிற்குள் அண்டவிடாது என்ற ஒரு உள் அர்த்தமும் இதில் அடங்கியுள்ளது. ஆன்மீகத்தில் ஈடுபடாதவர்கள் அறிவியல் ரீதியாக இந்த விஷயத்தை செய்து பயன்பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -