வெள்ளையாக சோப்பு போட்டு தேய்த்து தேய்த்து முகம் கழுவ வேண்டாம். ஒரு சொட்டு இந்த லிக்விடை முகத்தில் போட்டு தேய்த்தாலே போதும். முகம் கண்ணாடி போல மின்னும்.

face3
- Advertisement -

எங்காவது வெளியில் சென்றுவிட்டு வந்தால் நம்முடைய முகம் வாடிப்போய் இருக்கும். கருத்துப் போய் இருக்கும். வெளியில் இருக்கக்கூடிய பொல்யூஷன் மூலம் முகம் முழுவதும் சோர்ந்துபோய் அழுக்காகி சரும பிரச்சனையை உண்டாக்கிவிடும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வீட்டிற்கு வந்த உடனேயே சோப்பை தான் முகத்தில் போட்டு நுரை பொங்க பொங்க தேய்த்து கழுவுவோம். இல்லையென்றால் ஏதாவது ஒரு ஃபேஸ் வாஷ் போட்டு முகம் கழுவுவோம். இதுதான் நம்முடைய வழக்கம். ஆனால் இதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

சோப்பைப் போட்டு முகத்தை கழுவுவது மூலம் சருமத்தின் மேல் பக்கத்தில் இருக்கக்கூடிய அழுக்கு மட்டும் நீங்கிவிடும். முகம் வெள்ளையாக இருப்பது போல தெரியும். ஆனால் நம்முடைய முகத்தில் படிந்திருக்கும் தூசி தும்பு சருமத்தில் அப்படியே தான் தங்கியிருக்கும். இதை முழுமையாக சுத்தம் செய்ய என்ன ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம்‌. ‌நம்முடைய கையாலேயே சூப்பரான ஹோம் மேட் ஃபேஸ் வாஷ் எப்படி தயாரிப்பது.

- Advertisement -

முதலில் கடைகளில் பூந்திக்கொட்டை என்று விற்கும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அதிலிருந்து நான்கு பூந்திக் கொட்டைகளை எடுத்து உடைத்து உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கி விட வேண்டும். மேலே இருக்கக்கூடிய அந்த தோல் தான் நமக்குத் தேவை. 4 கொட்டைகளுடைய தோலை எடுத்து கொண்டு, சிறிய சிறிய துண்டுகளாக உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு 2 ஸ்பூன் அல்லது 3 ஸ்பூன் பச்சரிசியை போட்டு ஒருமுறை நன்றாக கழுவிவிட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி இந்த இரண்டு பொருட்களையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள்.

இந்த இரண்டு பொருட்களையும் ஊறவைத்த தண்ணீரோடு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவேண்டும். சாப்பாடு நன்றாக வெந்து குழைந்து வர வேண்டும் ஆனால் தண்ணீரும் கட்டாயம் இதில் கொஞ்சம் இருக்க வேண்டும். சாதம் வெந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இது வேகும் போதே தெரியும் இதில் நிறைய நுறை வரும். காரணம் நாம் பயன்படுத்தி இருக்கும் பூந்திக்கொட்டை.

- Advertisement -

அவ்வளவு தான். சாதம் நன்றாக வெந்து வந்ததும் ஒரு மத்தை வைத்து கடைந்தோ அல்லது ஒரு கரண்டியை வைத்து சாதத்தை நசுக்கிய இந்த விழுதை அப்படியே வடிகட்ட வேண்டும். நமக்கு ஒரு லிக்விட் கிடைத்திருக்கும். இந்த லிக்விடை பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 7 நாட்கள் கெட்டுப் போகாது. எப்போது நீங்கள் முகம் கழுவுவதாக இருந்தாலும் இந்த லிங்க்விடை ஒரு ஸ்பூன் உங்களுடைய உள்ளங்கைகளில் தேய்த்து உங்களுடைய முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து முகம் கழுவ வேண்டும்.

முகம் கழுவும் போது நுரை வந்தா தானே நமக்கு மனதில் திருப்தி கிடைக்கும். அதனால் தான் இதில் பூந்திக்கொட்டையை சேர்த்து செய்திருக்கின்றோம். தயார் செய்த இந்த லிக்விட் உங்களுக்கு வசதியான கண்டைநரில் போட்டு ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தால் 7 நாட்களில் உங்களுடைய முகத்தில் தெரியும் வித்தியாசத்தை உணரலாம். முகம் பார்ப்பதற்கு அப்படியே கண்ணாடி போல மின்னத் தொடங்கிவிடும். இந்த பேஸ் வாஷ் லிக்விட் அத்தனை பவர். உங்களுக்கு இந்த குறிப்பு புடிச்சிருக்கா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -