வெள்ளியங்கிரி மலையில் தோன்றிய சிவனின் சத்தம் – வீடியோ

Velliyangiri hills
- Advertisement -

வீடியோ கீழே உள்ளது
வெள்ளியங்கிரி மலை பற்றி அனைவரும் நன்கு அறிவர். தென் கைலாயம் என்று சிவன் பக்தர்களால் பக்தி பரவசத்தோடு போற்றப்படுகிறது இந்த மலை. ஏழு சிகரங்களை கொண்ட வெள்ளியங்கிரி மலையின் உயரம் சுமார் 3500 அடி ஆகும். இந்த மலையின் ஏழாவது சிகரத்தில் திடீர் என்று சிவ பூஜைக்கான ஓம் என்னும் பிரணவ மந்திரம் இயற்கையாக ஒலிக்க ஆரமித்தது. இதோ அந்த வீடியோ பதிவு.

ஏழு சிகரங்களாய் உள்ள இந்த மலையில் ஒவ்வொரு சிகரத்திற்கும் சில தனி சிறப்புகள் உண்டு. அந்த வகையில் பாம்பாட்டி சித்தருக்கு முருகப்பெருமான் இங்குள்ள இரண்டாவது சிகரத்தில் காட்சி கொடுத்துள்ளார். அதற்கு ஆதாரமாக இன்றும் இங்கு பாம்பாட்டி சித்தர் தவம் செய்த குகை மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட சுனை போன்ற பல விடயங்கள் உள்ளன.

- Advertisement -

இங்குள்ள ஏழாவது சிகரத்தில் தான் சுயம்பு வடிவில் சிவ லிங்கங்கள் உள்ளன. இங்கு தான் எப்போதாவது சிவனுக்கு உகந்த பஞ்ச வாத்திய சத்தம் கேட்கும் என்று கூறப்படுகிறது. இந்த பஞ்சவாத்திய சத்தங்கள் பூமிக்கு அடியில் வாசிக்கப்படுகிறது என்றும் அதன் ஒளி இந்த ஏழாவது மாலைவரை கேட்கிறது என்றும் கூறப்படுகிறது. இடி போன்ற சத்தம், காற்றில் ஓம் எனும் சத்தம் அல்லது வேறுவித ஓசை சத்தம், சங்கின் ஒளி, சிகண்டி ஒளி இப்படி ஏதோ ஒருவித சத்தம் கேட்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -