செல்வச்செழிப்பான வாழ்க்கை தரும் வல்லகி யோகம்

luxurious-house

ஜோதிட சாஸ்திரத்தில் மனிதர்களின் ஜாதகத்தில் ஏற்படக்கூடியதாக 100 கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் நன்மையான பலன் மற்றும் பாதகமான பலன்கள் கொடுக்கும் யோகங்கள் சரி விகிதத்தில் இருக்கின்றன. நன்மைகளை செய்யும் யோகங்களில் “வல்லகி யோகம்” எனப்படும் யோகமும் ஒன்று  இந்த வல்லகி யோகத்தை பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் ஜாதகத்தில் ராகு – கேது கிரகங்களை தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களும் ஜாதக கட்டத்தில் இருக்கும் ஏதேனும் ஏழு ராசிகளில் ஒரு ராசிக்கு ஒரு கிரகம் வீதம் இருந்தால் அந்த ஜாதகருக்கு வல்லகி யோகம் ஏற்படுகிறது. மிக அரிதாக ஏற்படும் யோகங்களில் இந்த வல்லகி யோகமும் ஒன்று.

வல்லகி யோகத்தில் பிறந்த ஜாதகர்கள் அதிகம் பெருந்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் பல வகையான சுகபோகங்களை அனுபவிப்பார்கள். தங்களின் சுய முயற்சியால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். இவர்களுக்கு இப்போதும் தங்களின் தாயாரிடமிருந்து உதவிகள் கிடைக்க பெறும். இந்த யோகத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கும்.

house with cars

தங்களின் கடின உழைப்பால் மிகுந்த செல்வம் சேர்த்து ஆடம்பர வீடு, வாகனம் என வசதியாக வாழ்வார்கள். இவர்களுக்கு அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்கள் கூடிக்கொண்டே போகும். இந்த யோகத்தில் பிறந்த பலருக்கும் கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். ஒரு சிலர் சிறந்த இசைக்கலைஞர்களாக உருவெடுத்து அதன் மூலம் பொன்னும், பொருளும் ஈட்டுவர். இன்னும் சிலர் நாடகம், திரைப்பட துறைகளில் ஈடுபட்டு மக்கள் அபிமானத்தையும், பொருள் மற்றும் புகழையும் ஈட்டுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
சொந்த உழைப்பின் மூலம் செல்வந்தனாக்கும் சுனபா யோக பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Valagi yogam palangal in Tamil or Village yoga benefits in Tamil.