புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதத்துக்கு கொஞ்சம் லீவு விடுங்க. புதுசா இந்த வெண்டைக்காய் சாதத்தை லஞ்சுக்கு கட்டி கொடுங்க. வெண்டைக்காயே பிடிக்காது என்பவர்கள் கூட இந்த சாதத்தை சாப்பிடுவார்கள்.

vendaikai-rice_tamil
- Advertisement -

லஞ்ச் பாக்ஸுக்கு சூப்பரான ஒரு வெரைட்டி ரைஸ் ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். வெண்டைக்காய் பிடிக்காத குழந்தைகள், பெரியவர்களுக்கு லஞ்ச் பாக்ஸுக்கு ஒரு முறை வெண்டைக்காய் சாதத்தை இப்படி கட்டி கொடுத்து பாருங்க. அவங்க நிச்சயமாக அதை விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் போல ஒரே மாதிரி புளிசாதம், எலுமிச்ச பழ சாதம், தயிர் சாதத்துக்கு லீவு விட்டு, இப்படியும் வெரைட்டி ரைஸ் செய்வதை பழகிக் கொள்ளுங்கள். இது உடலுக்கு ஆரோக்கியம் தர பழக்கமும் கூட. ஆரோக்கியமான ரெசிபி இதோ உங்களுக்காக.

வெண்டைக்காய் சாதம் செய்முறை:
இந்த ரெசிபிக்கு 1/4 கிலோ அளவு வெண்டைக்காயை எடுத்து முதலில் தண்ணீரில் கழுவி, ஈரத்தை துடைத்து விடுங்கள். அதன் பின்பு அந்த வெண்டைக்காயை கொஞ்சம் மெல்லிசாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு 1 கப் அளவு வடித்த சாதம் சரியாக இருக்கும். இந்த இரண்டு பொருட்களும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வெட்டி வைத்திருக்கும் வெண்டைக்காயை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து வெண்டைக்காயை வறுக்க வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வெண்டைக்காய் லேசாக பிரவுன் நிறத்திற்கு மாறி வரும் வரை வறுத்து, அந்த வெண்டைக்காய்களை தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதே கடாயில் இன்னும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன், வர மிளகாய் கிள்ளியது – 2, கருவேப்பிலை – 1 கொத்து, முந்திரி பருப்பு – 4, வேர்க்கடலை – 1 ஸ்பூன், இவைகளை போட்டு பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கை பிடி அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் போட்டு, வதக்கி விடுங்கள்.

- Advertisement -

வெங்காயம் பச்சை வாடை நீங்கி வதங்கியதும், சாம்பார் தூள் – 1 ஸ்பூன், புளிக்கரைசல் – 1 ஸ்பூன், ஊற்றி சாதத்துக்கு தேவையான அளவு உப்பு போட்டு, எல்லா பொருட்களையும் நன்றாக 2 நிமிடம் கலந்து விட்டு, இறுதியாக வடித்து வைத்திருக்கும் சாதத்தை உதிர்த்து போட்டு, கூடவே வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்களையும் போட்டு, எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து, சாதம் நன்றாக சூடாகி வந்ததும் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி, ஒரு மூடி போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ரேஷன் பச்சரிசியில் மணக்க மணக்க ஹோட்டல் ஸ்டைலில் சுவையான பொங்கலை இப்படி ஒரு முறை செய்து பாருங்க. இனி ஹோட்டல் பொங்கலை தந்த கூட வேண்டாம்ன்னு சொல்லுவீங்க.

இரண்டு நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் அருமையான வாசம் நிறைந்த வெண்டைக்காய் சாதம் தயாராகி இருக்கும். இதை அப்படியே லஞ்ச் பாக்ஸ்க்கு கட்டிக் கொடுக்கலாம். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். சுலபமாக இந்த சாதம் உள்ளே இறங்கிவிடும். இந்த சிம்பிள் ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -