ஒரு உளுத்தம்பருப்பு கூட போடாமல் மாவு அரைத்து, இட்லி செய்வது எப்படி? கிரைண்டரில் கூட மாவு அரைக்க வேண்டாம். மிக்ஸியில் மாவு அரைத்தும், இந்த இட்லியை செய்யலாம்.

vendhya-idli
- Advertisement -

உளுத்தம் பருப்பு சேர்க்காமல் இட்லி செய்ய முடியுமா. கட்டாயம் செய்ய முடியும். அது எப்படி, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உளுத்தம்பருப்பு சேர்க்காமல் செய்யக்கூடிய இட்லி என்றால் அது வெந்தய இட்லி. இந்த வெந்தய இட்லியை குறிப்பாக வெயில் காலங்களில் நம்முடைய வீட்டில் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சரி, இந்த ரெசிபியை எப்படி செய்யலாம். தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Vendhayam

பொதுவாக, வெந்தய இட்லிக்காக நிறைய மாவு ஆட்டி, சாதாரண இட்லி மாவு போல வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு வேளையோ அல்லது இரண்டு வேளையோ தான் இந்த இட்லியை சாப்பிட முடியும் அல்லவா. ஆகவே 1 டம்ளர் அளவு அரிசிக்கு உண்டான அளவுகளை இன்று நாம் தெரிந்து கொள்வோம். உங்களுக்கு தேவைப்பட்டால் இதனுடைய அளவுகளை அப்படியே இரட்டிப்பாக்கி கிரைண்டரில் போட்டும் மாவு ஆட்டி கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்.

- Advertisement -

இதற்கு தேவையான பொருட்கள். இட்லி அரிசி – 1 டம்ளர், வெந்தயம் – 2 ஸ்பூன், ஆமணக்கு கொட்டை –  2 விதை, கொட்டைமுத்து விதைகள் என்றும் இதை சொல்லுவார்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த ஆமணக்கு கொட்டைகளை இட்லியில் சேர்ப்பதன் மூலம் இட்லி அத்தனை மெதுவாக கிடைக்கும். உங்களுக்கு இந்த ஆமணக்கு கொட்டையை சேர்ப்பதில் விருப்பம் இல்லை என்றால் தவிர்த்துக் கொள்ளலாம்.

vendhya-idli1

இட்லி அரிசி 4 லிருந்து 5 மணிநேரம் ஊறவேண்டும். வெந்தயத்தை ஒரு முறை கழுவி தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் மொழுமொழுவென அறைந்து கிடைக்கும். ஆமணக்கு கொட்டைகளை உடைத்து தோலை மட்டும் நீட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் முதலில் வெந்தயம், ஆமணக்கு கொட்டை இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து, வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி விழுதுபோல் அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்வோம். அதன் பின்பு ஊற வைத்திருக்கும் அரிசியை 3 முறை கழுவி கொள்ள வேண்டும். அதன் பின்பு அந்த அரிசியை, மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். மாவு 90 சதவிகிதம் அரை படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரளவுக்குத்தான் நறநறப்பாக இருக்க வேண்டும்.

kottai-muthu

இப்போது அரைத்த வெந்தய விழுதுடன், அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவையும் ஒன்றாக சேர்த்து, மாமாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு உங்கள் கையை போட்டு நன்றாக கரைத்து இட்லி மாவு போலவே புளிக்க வைப்பது போலவே 6 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ள வேண்டும்.

vendhya-idli2

புளித்த மாவை லேசாக கலந்து, அதன் பின்பு எப்போதும் போல இட்லி வார்க்கலாம். இதில் நாம் ஒரு உளுந்து கூட சேர்க்கவில்லை. பார்ப்பதற்கு இந்த இட்லியினுடைய கலர் தான் கொஞ்சம் குறைவாக இருக்கும்‌. அவ்வளவு வெள்ளையாக இருக்காது. அவ்வளவு தான். மற்றபடி சுவையில் எந்த வித்தியாசமும் தெரியாது. நீங்களும் உங்களுடைய வீட்டில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -