வெந்தய குழம்பை உங்கள் வீட்டில் ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள்! மிகவும் சுவையாக இருக்கும்.

vendhaya-kuzhambu1

நம்முடைய உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் குழம்பை, வாரத்தில் ஒருமுறையாவது நம்முடைய வீட்டில் சமைப்பது மிகவும் நல்லது. ஒவ்வொருவர் வீடுகளில், ஒவ்வொரு விதமாக, வெந்தய குழம்பு வைப்பார்கள். அந்த வரிசையில், சுலபமான முறையில், சுவையாக இருக்கக் கூடிய வெந்தய குழம்பை, இந்த முறைபடி, ஒரு முறை உங்களுடைய வீடுகளிலும் வைத்துப் பாருங்கள்! ஆரோக்கியமான வெந்தய குழம்பு எப்படி வைப்பது, என்பதை தெரிந்து கொள்ளலாமா?

Vendhayam

Step 1:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் புழுங்கல் அரிசி, 3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். அரிசி, பொரி அரிசி போல், வெள்ளை நிறத்தில் பொரிந்து வரவேண்டும். வெந்தயம், வாசனை வரும் அளவிற்கு வறுபட வேண்டும். தீய வைத்து விடாதீர்கள். வருத்த இந்த இரண்டு பொருட்களையும், ஒரு தட்டில் கொட்டி, நன்றாக ஆற வைத்து, அதன் பின்பு மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை மொத்தமாக குழம்பிற்கு பயன்படுத்தப் போவதில்லை. ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக்கொண்டால், தேவைப்படும்போது வெந்தய குழம்பு வைத்துக் கொள்ளலாம்.

Step 2:
மீடியம் சைஸ் உள்ள இரண்டு பழுத்த தக்காளிகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு, ஊற வைத்து, கரைத்து புளிக்கரைசலை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

vendhaya podi

Step 3:
அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து விட்டு, 4 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும், கடுகு அல்லது வெங்காய வடகம் இருந்தால் தாளித்து கொள்ளலாம். அடுத்ததாக சீரகம் – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, சின்ன வெங்காயம் – 10 பல், பூண்டு – 5 பல் தோல் உரித்து பொடியாக நறுக்கியது, மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், தனியா தூள் – 1 டேபிள்ஸ்பூன், இவைகளைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

அதாவது வெங்காயம் வதங்கியவுடன், அடுத்தடுத்து சொல்லப்பட்டுள்ள மசாலா பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்குங்கள்! இறுதியாக, அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, தக்காளியின் பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கி விடுங்கள். அதன்பின் ஒரு நெல்லிக்காய் அளவு புளி கரைசலை கடாயில் ஊற்றி, குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, மூடி போட்டு பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

vendhaya-kuzhambu

குழம்பு கொதித்து, புளியின் பச்சை வாடை போன பின்பு, முதலில் வெந்தயத்தையும், பச்சரிசியையும் அரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா? அதிலிருந்து 2 டேபிள் ஸ்பூன் அளவு குழம்பில் சேர்த்து, மூடி போட்டு மீண்டும், மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்தால், வாசனையோட வெந்தயக் குழம்பு தயார்! உங்களுக்கும் இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!

vathakuzhambu 1

பின்குறிப்பு: சில பேருக்கு மிளகாய்த்தூள் தனியாத்தூள், எண்ணெயில் போட்டு வதக்கேவதற்கு பிடிக்காது. அப்படியிருந்தால், புளிக்கரைசலை சேர்த்து விட்டு, அதன் பின்பு தேவையான அளவு தண்ணீரை விட்டு, மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து அரைத்த, குழம்பு மிளகாய் தூளாக இருந்தாலும், காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் வைக்கும் கொழும்பின் அளவிற்கு ஏற்ப, வெந்தயப் பொடியையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
இரும்புக் கல்லில் கூட, நான்ஸ்டிக் தவாவில் தோசை சுடுவது போல மொறுமொறு தோசை சுட முடியும். இந்த டிப்ஸை பின்பற்றினால்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.