இந்த 1 பொருளை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் எதை மனதில் நினைத்தாலும் அது உடனே நடக்கும். சாபமும் விலகி செல்லும்

vinayagar-pray
- Advertisement -

பொதுவாகவே மனிதர்கள் தங்களுடைய மனதில் இரண்டு விஷயங்களை நினைப்பார்கள். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு ரகம். இரண்டு, அடுத்தவர்களுக்கு எப்படியாவது இந்த கெடுதல் நடந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு ரகம். அதாவது எல்லோரையுமே குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். மனிதர்களுடைய இயல்பு இது தான். தனக்கு நல்லது நடக்க வேண்டும். தனக்கு பிடித்தவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும். தன் குடும்பம் மட்டும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் முக்கால்வாசிபேர். இந்த இரண்டு விஷயங்களையும் அடிப்படையாக வைத்துதான் என்று ஒரு பரிகாரத்தை பார்க்கப் போகின்றோம்.

நமக்கு நல்லது மட்டமே நடப்பதற்கு, பிரார்த்தனை செய்யும்போது நாம் எந்த பொருளை கையில் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், அதேசமயம் அடுத்தவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ கெடுதல் நினைத்து சாபமும் விட்டுவிட்டோம். நாம் விட்ட சாபம் பலிக்கக்கூடாது. ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன். அவர்கள் குடும்பமும் நல்லா இருக்கட்டும் என்று நினைத்தால், கொடுத்த சாபத்தை வாபஸ் வாங்க கையில் எந்த பொருளை வைத்து வேண்டி கொள்ள வேண்டும் என்ற இந்த இரண்டு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதலில் நல்லது இருந்து ஆரம்பிப்போம். கையில் 1 ஜாதிக்காயை வைத்துக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் என்ன நல்லது நடக்க வேண்டுமோ அதை வார்த்தைகளால் சொல்லி அந்த நல்லது பலிக்க வேண்டும் என்று மனதார இந்த பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். குழந்தைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். இப்படி என்ன தேவையாக இருந்தாலும் நல்ல வார்த்தைகளை சொல்லும்போது அந்த வார்த்தைகளுக்கான பலன் உங்களுக்கு உடனே கிடைக்கும்.

வேண்டுதலை முடித்து விட்டு ஜாதிக்காயை ஒரு கிண்ணத்தில் போட்டு ஏதாவது ஒரு இடத்தில் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் வேண்டுதல் வைக்கும்போது அந்த ஜாதிக்காயை உள்ளங்கையில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக சாபத்திற்கு வருவோம்‌. யாரோ ஒரு எதிரி நல்லாவே இருக்க கூடாது என்று சாபம் கொடுத்திட்டீங்க. நீங்கள் சாபம் கொடுத்த குடும்பம் கஷ்டப்பட்டும் கொண்டிருக்கிறது. அதை கண்கூடாகப் பார்த்து வருத்தப்பட்டு நீங்கள் பேசியது தவறு என்று உணர்ந்து, சாபத்தை வாபஸ் வாங்கிக் கொண்டு, மனதார இறைவனிடம் மன்னிப்பு கேட்கும்போது அந்த சமயம் உங்களுடைய வலது உள்ளங் கைகளில் ஏலக்காயை வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விட்ட சாபத்தின் பவர் குறையத் தொடங்கும்.

வயிறு எரிந்து சாபம் கொடுக்கும்போது அந்த வார்த்தைகள் அப்படியே பலிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் நாம் விட்ட சாபத்தின் மூலம் எதிராளிகள் குடும்பம் கஷ்டப்படுகிறது. வாஸ்தவம்தான். இருப்பினும் சில காலம் கழித்து நாம் அவர்களுக்கு விட்ட சாபம் மீண்டும் வந்து, நம் குடும்பத்தை தொற்றிக்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது என்பதை மறக்காதீர்கள். அடுத்தவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து என்றைக்குமே அடுத்தவர்களுக்கு சாபம் கொடுக்காதீங்க என்ற இந்த ஒரு தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -