நினைத்த காரியம் நடக்க மார்கழி தீபம்

poojai arai aandal
- Advertisement -

மார்கழி மாதம் தொடங்கி எத்தனை நாட்களில் நாம் எத்தனையோ வழிபாடு முறைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் பலவற்றை நாம் செய்தும் இருப்போம். ஆனால் இதே மார்கழி மாதத்தில் நம்முடைய வேண்டுதல் நிறைவேற நம்முடைய கனவுகள் பலிக்க ஒரு அற்புதமான தீப வழிபாட்டு முறை உள்ளது. அதைப் பற்றிய தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

நினைத்த காரியம் நடக்க மார்கழி மாதத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

நம்முடைய வழிபாட்டு முறைகள் எதுவாக இருப்பினும் அதில் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுவது தீபம் ஏற்றுவது தான். தீபத்தின் ஒளியில் தெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. ஆகையால் தான் ஒவ்வொரு வழிபாட்டையும் நாம் தீபம் ஏற்றி அதன் ஒளியிலே துவங்குகிறோம். அப்படியான ஒரு தீப வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த பதிவிலும் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இந்த தீபத்தை மார்கழி மாதம் முடிவதற்குள்ளாக ஏற்ற வேண்டும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு இருப்பது போல மார்கழி மாதம் முழுவதும் வழிபாட்டிற்குரிய மாதம். அந்த மாதங்களில் நாம் வேண்டும் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றித் தரும் என்று நம்பப்படுகிறது. அதே நம்பிக்கையுடன் இந்த தீபத்தை மார்கழி மாதத்தில் நம் பூஜை அறையில் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அகண்ட தீபம் என்று சொல்வார்கள்.

இதற்கு ஒரு பெரிய அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். அதை முதல் நாளே தண்ணீரில் ஊற வைத்து நன்றாக துடைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த அகலுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். இந்த தீபத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் ஏற்றலாம். ஆனால் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

ஆகையால் அதற்கு முதல் நாளை இதையெல்லாம் தயார் செய்து வைத்து விடுங்கள் அதே போல் இதற்கு ஒரு வாழை இலை கொஞ்சம் நெல்மணிகள் தேவை இவையும் தயாராக வைத்து விடுங்கள். இந்த தீபம் ஏற்றும் நாள் அன்று காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து விட்டு பூஜை அறையில் முதலில் ஒரு தீபம் ஏற்றி விடுங்கள்.

அதன் பிறகு தரையில் ஒரு மனை வைத்து மனையின் மேல் கோலம் போட்டு அதன் மேல் வாழையிலை வையுங்கள். இந்த வாழை இலையின் மேல் நெல்மணிகளை பரப்பி அதன் மீது இந்த அகண்ட விளக்கை வைக்க வேண்டும். இதில் நல்ல தடிமனான பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்று விடுங்கள். இந்த தீபத்தை நீங்கள் ஏற்றிய நாள் முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து எறிய வேண்டும்.

- Advertisement -

தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது அணையாதவாறு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதற்கேற்றார் போல் திரியும் தயார் செய்து கொள்ளுங்கள். இந்த தீபம் எரியும் போது அதில் மூன்று சொட்டு தேனை விட வேண்டும்.மூன்றாவது நாளில் இந்த தீபத்தை குளிர வைத்து விட்டு நெல்மணிகளை நீங்கள் வீட்டில் உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பசு மாட்டிற்கு தானமாக கொடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நவகிரகங்களும் நன்மையை தர பரிகாரம்

இந்த தீப எறியும் போது அதன் முன் அமர்ந்து நீங்கள் வேண்டும் யாவும் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் நினைத்த யாவையும் நிறைவேற்றி தரக்கூடிய இந்த அற்புதமான தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் ஏற்றி பலன் அடையுங்கள்.

- Advertisement -