வெள்ளைக்காரர்களை விட நீங்க ரொம்ப ரொம்ப வெள்ளையா மாற வெறும் வெந்தயம் போதும். இளமையான தோற்றத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளலாம்.

face
- Advertisement -

எப்போதுமே மாநிறமாக இருப்பவர்களுக்கு, கருப்பாக இருப்பவர்களுக்கும், வெள்ளையாக இருப்பவர்களை பார்க்கும்போது ஒரு ஆசை வரும். நாமும் இப்படி வெள்ளை நிறமாக மாற முடியாதா என்று. உங்களுடைய சரும நிறத்தை கூடிய சீக்கிரத்தில் வெள்ளையாக மாற்றக்கூடிய ஒரு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களை வைத்து இந்த குறிப்பை பின்பற்ற போவதால் எதிர்காலத்தில் எந்த ஒரு பக்க விளைவுகள் வந்து விடுமோ என்ற எந்த பயமும் தேவை கிடையாது.

இரவு முகத்தில் போடக்கூடிய ஒரு ஜெல் ரெசிபி. முகத்தில் ஸ்பிரே செய்யக்கூடிய ஒரு டோனர் ரெசிபி. ஆக மொத்தத்தில் 2 அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக.

- Advertisement -

சுலபமான டோனர்:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அதில் சோம்பு – 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், ஏலக்காய் 4 தட்டி போட்டு இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 1 டம்ளர் தண்ணீர் முக்கால் டம்ளர் அளவு தண்ணீராக வரும். நாம் சேர்த்திருக்கக் கூடிய பொருட்களின் எசன்ஸ் தண்ணீரில் இறங்கி தண்ணீரில் நிறம் மாறி இருக்கும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாக ஆற வைத்து இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்தால் 7 லிருந்து 10 நாட்கள் கெட்டுப் போகாது. இந்த டோனரை காலை, மதியம், மாலை 3 வேளை உங்களுடைய முகத்தில் ஸ்பிரே செய்து அப்படியே விட்டுவிடலாம். இந்த தண்ணீரை முகம் சில நிமிடங்களில் உறிஞ்சி கொள்ளும். இந்த ஸ்ப்ரேவை முகத்தில் அடித்த பின்பு 1 மணி நேரத்திற்காவது முகத்தை தண்ணீர் போட்டு கழுவ வேண்டாம். சோப்பு போட்டு முகத்தை கழுவ வேண்டாம். அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

நைட் க்ரீம்:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் 2. வெந்தய தண்ணீர் மற்றும் அலோவேரா ஜெல். கலர் மற்றும் வாசனை திரவியம் சேர்க்கப்படாத அலோவேரா ஜெல் நமக்குத் தேவை.

வெந்தயத்தை தண்ணீரில் போட்டு 5 லிருந்து 6 மணி நேரம் நன்றாக ஊற வைத்து விடுங்கள். வெந்தயத்தின் சத்து அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். தண்ணீரின் நிறமும் மாறி இருக்கும். இப்போது வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரோடு அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து விடுங்கள். தண்ணீர் கொஞ்சம் சுண்டி வந்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும். அதன் பின்பு வெந்தயத்தை வடிகட்டி வெந்தய தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அலோவேரா ஜெல்லை சேர்த்து அதில் இந்த வெந்தய தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்தால் லிக்விட் ஆக ஒரு ஜெல் கிடைக்கும். (தேவையான அளவு வெந்தயத் தண்ணீரை ஊற்றுங்கள். நான் தயார் செய்யும் இந்த இரவு க்ரீம் ரொம்பவும் தண்ணீராக இருக்கக் கூடாது. ரொம்பவும் கட்டியாகவும் இருக்கக் கூடாது. அப்ளை செய்வதற்கு லிக்விட் ஜெல் பதத்தில் இருக்க வேண்டும்.)

இந்த ஜெல்லை ஒரு கண்டெய்னரில் ஊற்றி மூடி போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 20 நாட்கள் வரை கெட்டுப்போகாது. இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவி துடைத்து விடுங்கள். ஜெல்லை முகத்தில் ஆங்காங்கே சிறுசிறு புள்ளிகளாக வைத்து அப்படியே லேசாக கண்ணுக்கு தெரியாமல் தடவி விட்டு விட வேண்டும். இரவு முகத்தை கழுவ வேண்டாம். மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். தினமும் இரவு இந்த கிரீமை பயன்படுத்தி வந்தால் உங்களுடைய சருமம் வெள்ளையாக மாறும். நீண்ட நாட்களுக்கு சுருக்கமில்லாமல் இளமையாகவே இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -