- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டியதை தரும் வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு

வேண்டியதை தரும் வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு

- Advertisement -

உக்கிர தெய்வங்களாக இருக்கக்கூடிய பெண் தெய்வங்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் வாராகி அம்மன். சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடிய இந்த வாராகி அம்மனை பலரும் பஞ்சமி திதியில் தான் வழிபாடு செய்வார்கள். பஞ்சமி திதி எந்த அளவிற்கு வாராகி அம்மனுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்கிறதோ அதே போல் தான் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் நாம் நினைத்தது அனைத்தையும் பெற முடியும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது. அந்த வகையில் வாராகி அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியது. அந்த நாளில் நாம் வாராகி அம்மனை முழு மனதோடு நம்முடைய வீட்டிலேயே சில எளிமையான நெய்வேத்தியங்களை வைத்து வழிபாடு செய்யும்பொழுது எந்தவித வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும். அதோடு மட்டுமல்லாமல் நம் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்குரிய வழியும் கிடைக்கும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 3, 5, 7, 9, 11 வாரங்கள் என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் நாம் செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். வீட்டில் வாராஹி அம்மனின் படம் அல்லது சிலை கண்டிப்பான முறையில் வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை அன்று இரவு 8:30 மணியிலிருந்து 10:30 மணிதான். இந்த நேரத்திற்குள் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். சிலை வைத்திருப்பவர்கள் விரலி மஞ்சள் ஊறவைத்து அம்மியில் அரைத்து அந்த மஞ்சளை கரைத்து அபிஷேகம் செய்யும் பொழுது வாராகி அம்மனின் மனம் குளிரும்.

வாராகி அம்மனுக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு வாசனை மிகுந்த மலர்களை சாற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு நெய்வேத்தியம் வைக்க வேண்டும். பொதுவாக வாராஹி அம்மனுக்கு பலரும் சக்கரவள்ளி கிழங்கைதான் நெய்வேத்தியமாக வைப்பார்கள். அப்படி சக்கரவள்ளி கிழங்கை வைப்பதோடு சேர்த்து பனங்கிழங்கையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். ஒருவேளை பனங்கிழங்கு கிடைக்கவில்லை என்பவர்கள் பனங்கற்கண்டில் செய்த பானகத்தை வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைக்கலாம்.

- Advertisement -

அடுத்ததாக வெள்ளை மொச்சையை வேக வைத்து அதை தேனில் கலந்து வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் வெள்ளிக்கிழமை இந்த நேரத்தில் வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மன் மனம் மகிழ்ந்து நாம் வேண்டிய வரத்தை தந்து நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவார். தங்களுக்கு தெரிந்த வாராஹி அம்மனின் மந்திரத்தையோ அல்லது வாராகி அம்மனின் பெயரைக் கூட 108 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்து கொள்ளலாம். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையை மாற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு

வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. மிகவும் எளிமையான இந்த வழிமுறையை முழுமனதோடு பின்பற்றி வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்