- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்க்கையை மாற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு

வாழ்க்கையை மாற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு

- Advertisement -

என்றும் சிரஞ்சீவியாக இருக்கக்கூடியவர் ஆஞ்சநேயர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த உலகத்தில் இன்றளவும் நாம் நினைத்தவுடன் நமக்காக ஓடிவந்து நம்மை காத்து ரட்சிக்கக்கூடிய அற்புதமான தெய்வமாக திகழ்பவர்தான் ஆஞ்சநேயர். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை பலவிதமான வேண்டுதலுக்காக பல விதங்களில் வழிபாடு செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருக்கிறோம். அந்த வகையில் நினைத்தது நடக்கவும், கேட்டது கிடைக்கவும், இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்ப பெறவும் 48 நாட்கள் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நன்றாக வசதியாக இருந்தவர்கள் தேவையில்லாத பழக்கவழக்கத்தினாலும் தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டதாலும் தங்களுடைய செல்வங்கள் அனைத்தையும் இழந்து வாழ வழி இல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் கூட அந்த சூழ்நிலையை சமாளித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவக்கூடிய தெய்வமாக திகழ்பவர்தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை முழு மனதோடு நம்பி இந்த முறையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது அவரின் அருளால் நாம் என்ன நினைத்த அந்த வழிபாட்டை செய்கிறோமோ அது நிறைவேறும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஆஞ்சநேயரின் நட்சத்திரமான மூல நட்சத்திர நாளில் செய்ய தொடங்குவது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு நமக்கு ஆஞ்சநேயரின் படம் என்பது வேண்டும். வீட்டு பூஜை அறையில் ஆஞ்சநேயரின் படத்தை வைத்து அவருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தை ஆஞ்சநேயருக்கு முன்பாக வைக்க வேண்டும்.

பிறகு கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு ஆஞ்சநேயரின் பின்வரும் இந்த இரண்டு மந்திரங்களை முழுமனதோடு கூற வேண்டும். தினமும் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை மாற்ற வேண்டும். வழிபாட்டை செய்து முடித்த பிறகு அதை எடுத்து நாம் உண்ண வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை லட்டை ஆஞ்சநேயருக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயாய மகாபலாய ஸ்வாஹா”

இந்த மந்திரத்தை 48 முறை கூறவேண்டும் 48 முறை கூறி முடித்த பிறகு அடுத்ததாக “ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்” என்னும் மந்திரத்தை 12 முறை கூற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் முதல் கூறிய மந்திரத்தை 48 முடியும் இரண்டாவது கூறிய மந்திரத்தை 12 முறையும் கூற வேண்டும். தினமும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். லட்டுவையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த முறையில் நாம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவிட்டு நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை முன் வைத்தோம் என்றால் 48 நாட்கள் நிறைவடைவதற்குள்ளேயே அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வழி பிறக்கும்.

இதையும் படிக்கலாமே: குபேரரை வசியம் செய்யும் தீபம்

அதிசக்தி வாய்ந்த தெய்வமாக திகழக்கூடிய ஆஞ்சநேயரை முழுமனதோடு இந்த முறையில் தொடர்ச்சியாக 48 நாட்கள் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் கேட்டது கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்