- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதலை நிறைவேற்றும் ஒரு வரி மந்திரம்

வேண்டுதலை நிறைவேற்றும் ஒரு வரி மந்திரம்

- Advertisement -

மார்கழி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மார்கழி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட சனிக்கிழமை வருடத்தின் முதல் சனிக்கிழமையாக இருக்கும் பட்சத்தில் அதற்குரிய பலன் சற்று அதிகமாகவே இருக்கும். அப்படி வரக்கூடிய 2025 ஆம் ஆண்டின் முதல் சனிக்கிழமை என்பது ஜனவரி மாதம் நான்காம் தேதி மார்கழி மாதம் 20ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் பெருமானை நினைத்து எந்த மந்திரத்தை கூறினால் வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வேண்டுதலை நிறைவேற்றும் ஒரு வரி மந்திரம்

ஒவ்வொரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுதும் அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை கூறி வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு எப்பொழுதும் கிடைக்கக்கூடிய பலனை விட சற்று அதிகமாகவே கிடைக்கும். அதனால்தான் மந்திரத்திற்கு சக்திகள் அதிகம் என்று கூறப்படுகிறது. மந்திரத்தை முழுமனதோடு சரியாக உச்சரித்தால் தான் அதன் பலன் கிடைக்கும். சரியாக உச்சரிக்காத பட்சத்தில் அதனால் எதிர்மறை விளைவுகள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் தான் பலரும் மந்திர உச்சாடல் செய்யும் பொழுது சற்று கவனத்துடனே செய்வார்கள். மேலும் பலரும் மந்திர உச்சாடலை தவிர்த்து விட்டு தெய்வங்களின் பெயரையே மந்திரமாக உச்சரிப்பார்கள். அந்த வகையில் பெருமாளிடம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் வருடத்தின் முதல் சனிக்கிழமையான ஜனவரி மாதம் நான்காம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு முன்பாக வடக்கு பார்த்தவாறு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அவருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது காய்ச்சாத பசும்பால் இரண்டில் ஏதாவது ஒன்றை வைக்கலாம். அந்த நேரத்தில் பசும்பால் கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் சுத்தமான தண்ணீரை கூட வைக்கலாம். இப்பொழுது தரையில் ஒரு விரிப்பை விரித்து அதில் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு துளசி இலையை பயன்படுத்தி பெருமாளின் இந்த ஒரு வரி மந்திரத்தை கூறி பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்து முடித்த பிறகு நாம் என்ன வேண்டுதல் வேண்டும் என்று நினைத்தோமோ அதை கேட்க வேண்டும். அப்படி நாம் கேட்கும் பட்சத்தில் பெருமாள் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார். ஒருவேளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்ல இயலவில்லை என்று நினைப்பவர்கள் மாலை ஐந்து முப்பது மணிக்கு பிறகு இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வதற்குரிய பலனை விட சற்று குறைவாகவே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு அமர்ந்து கொண்டும் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம்.

மந்திரம்

“ஓம் நமோ பகவதே வாசுதேவாய”

இதையும் படிக்கலாமே:மார்கழி சனிக்கிழமை உக்கிர தெய்வ வழிபாடு
மிகவும் எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். அப்படி கூறும் பொழுது முழு மனதுடன், ஆத்மார்த்தமாக பெருமாளை நினைத்து கூறினோம் என்றால் கண்டிப்பான முறையில் பெருமாள் மனமிறங்கி வந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்