4 வெங்காயம் இருந்தா போதும் காலை டிபன், முதல் இரவு டின்னர் வரை இந்த ஒரு டீஷ் வைச்சே சமாளிச்சுடலாம். கேட்கும் போதே செமையா இருக்கு இல்ல, வாங்க அது என்னன்னு தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

இந்த சமையலை பொறுத்த வரையில் மூன்று வேலையும் ஏதாவது ஒன்று வகையாக செய்து கொண்டே இருக்க முடியாது. ஏதாவது ஒரு நாளில் சிம்பிளாக செய்ய வேண்டும் என்றும், அதே நேரத்தில் சுவையாகவும் இருந்து விட்டால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றும். அது போன்ற நேரங்களில் இந்த தொக்கு செய்து விட்டால் போதும். காலை டிபன் முதல், இரவு டின்னர் வரை எல்லாவற்றிற்கும் இது ஒன்றையே வைத்து சமாளித்து விடலாம். இந்த சிம்பிள் ரெசிபி எப்படி செய்வது என்று இந்த சமையல் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தொக்கு செய்வதற்கு வெறும் வெங்காயத்தை வைச்சு செய்திடலாம். நாலு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொண்டு செய்ய ஆரம்பித்து விட வேண்டியது தான்.

- Advertisement -

செய்முறை

அடுப்பை பற்ற வைத்து அதில் பேனை வைத்து சூடானதும், இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு துண்டு இஞ்சி இவைகளை சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்த பிறகு அதில் ஒரு நெல்லிக்காய் அளவிற்கு புளி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் பத்து முந்திரி பருப்புயை உடைத்து சேர்த்து, இவற்றுடன் இரண்டு ஸ்பூன் வெல்லம், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பை லோ ஃப்லேமில் வைத்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் சேர்ந்து எண்ணெயில் நன்றாக வதங்கியவுடன் அடுப்பை அணைத்து விட்டு, இது ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்தால் தான் இது சாப்பாடு, டிபன் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.

மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்த பிறகு ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு தனியாக தாளிப்பு எதையும் சேர்க்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அப்படியே எடுத்து பரிமாறு விட வேண்டியது தான்.

இதையும் படிக்கலாமே: 1 மாதம் ஆனாலும் கெட்டுப் போகவே செய்யாத ‘இனிப்பு இஞ்சி புளி’ ரெசிபி எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது? இத செஞ்சு சாப்பிட்டு பாருங்க இதன் சுவையை மறக்கவே மாட்டீங்க!

இந்த தொக்கு காரம், புளிப்பு, இனிப்பு என்று அனைத்தும் சேர்ந்து இருப்பதால் சுடச் சுட சாதம் வைத்து அதில் போட்டு இது சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். அதே நேரத்தில் இட்லி பூரி, சப்பாத்தி, தோசை என எந்த டிபன் செய்தாலும் அதற்கும் இந்த தொக்கு நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும் இதை செய்வதும் மிகவும் சுலபம் தான். ஒரு வாரம் ஆனாலும் இந்த வெங்காய தொக்கு கேட்டு போகாது. நீங்களும் உங்க வீட்டில் இந்த சிம்பிள் ரெசிபியை செஞ்சு பாருங்க.

- Advertisement -