வீட்டில் சாம்பிராணி போடும்போது இதையும் கலந்து போட்டுப்பாருங்கள். கெட்டது விலகி, மன நிம்மதி தொடங்கி பல விஷயங்கள் தானாக வந்து சேரும்.

doobam
- Advertisement -

குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்கும் ஒரு அழகிய இடம் வீடு. ஆனால் சில நேரங்களில் தீர்க்க முடியாத கவலை, மனக்குழப்பம், காரணமில்லாமல் உறவினர்களிடம் பிரச்சனை, தொழிலில் போட்டி, பொறாமை, பணகஷ்டம் உடல்நலக்குறைவு, புது புது பிரச்சினைகள் இவ்வாறு தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் பொழுது வீட்டில் மகிழ்ச்சி என்பது மறைந்து எப்பொழுதும் ஒரு கவலையான சூழ்நிலையே சூழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு என்ன காரணம் என்றே நமக்கு தெரியாது. இவ்வாறான பிரச்சனைகளை சாஸ்திர பொருளான வெண்கடுகை பயன்படுத்தி எவ்வாறு தீர்க்கலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

venkadugu

கடுகு என்றால் தாளிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள் என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்த வெண்கடுகை பலருக்கும் தெரிவதில்லை. நமது முன்னோர்கள் இந்த வெண் கடுகை தான் தாளிப்பதற்கு பயன்படுத்தியிருக்கின்றனர். வெண்கடுகு மிகவும் குளிர் நிறைந்த பிரதேசங்களில் விளைவதால் காலப் போக்கில் அவற்றை நாம் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டோம். எனவே இதனைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. வெண்கடுகு காலபைரவரின் அம்சம் பொருந்தியது.

- Advertisement -

காலபைரவர் இந்த பிரபஞ்சத்தினை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் பாதுகாவலர். எனவே கால பைரவரின் அம்சம் பொருந்திய இந்த வெண் கடுகினை நாம் பயன்படுத்தி வீட்டில் சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் நம்மை சுற்றியுள்ள தீமைகளை அழிக்க முடியும்.

kala-bairavar

வெண்கடுகு பூஜை முறைகள்:
வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி பூஜை செய்யும் பொழுதும், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் பூஜை செய்யும் பொழுதும் சாம்பிராணி தூபம் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அந்த சமயங்களில் சிறிதளவு வெண்கடுகிணையும் இந்த சாம்பிராணியுடன் சேர்த்து தூபம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நம்மை சுற்றி எப்பொழுதும் நல்லதே நடக்கும்.

- Advertisement -

தொழிலில் போட்டி, உறவினர்கள் நம்மை பார்த்து பொறாமை படுதல் இவற்றினால் நமக்கு பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த பிரச்சனைகளில் நாம் பாதிக்காமல் இருக்க வெண்கடுகை ஒரு சிறிய சிவப்பு துண்டில் மூட்டையாகக் கட்டி அதனை அகல் விளக்கில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது அதிலுள்ள வெண் கடுகு நன்றாக சத்தத்துடன் பொரியும். வெண்கடுகு பொரிவது போல் நம்மீது உள்ள அனைத்து கண் திருஷ்டி பார்வைகளும் பொறாமை எண்ணங்களும் பொரிந்து போகும்.

venkadugu

நம் மீது பொறாமை கொண்டவர்கள், ஏதேனும் பிரச்சனைகளில் நம்மை மாற்றிவிட நினைப்பவர்கள், நமக்கு எப்போதும் கெட்டதே நடக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சிலர் நமக்குத் தீமை செய்யும் சில செயல்களை செய்து நமக்கே தெரியாமல் நமது வீட்டில் வைத்திருப்பார்கள். அவற்றை வீட்டில் இருந்து அகற்ற நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஒரு தட்டில் வெண்கடுகை போட்டு அதனை பூஜை அறையில் வைத்து ஒரு அகல் தீபம் ஏற்றி வெண் கடுகின் மீது கைவைத்து “ஓம் தும் துர்காய நமஹ” என்ற துர்க்கை அம்மனின் மந்திரத்தை 108 முறை உச்சரித்து பின்னர் நமக்குத் தேவையானவற்றை வேண்டிக் கொள்ள வேண்டும்.

venkadugu

இவ்வாறு வேண்டிக்கொண்ட பின் அந்த வெண்கடுகை வீட்டின் நான்கு மூலைகளிலும் தூவி விடவேண்டும். வீட்டின் வெளிப்புறம் இடம் இருந்தால் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளில் உள்ள மூலைகளிலும் போட வேண்டும். இதனை ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் செய்தால் மிகுந்த பயனளிக்கும். வீட்டினுள் போட்டுவைத்த வெண்கடுகினை மறுநாள் சேர்த்து எடுத்து ஒரு மூட்டையாக கட்டி வீட்டில் யாரும் பார்க்காமல் ஏதேனும் ஒரு இடத்தில் வைக்கவேண்டும். வீட்டிற்கு வெளியே போட்ட வெண்கடுகை அப்படியே விட்டு விடலாம். இப்படி செய்வதால் கடவுளின் அருள் நமக்கு கிடைப்பதோடு வீட்டில் ஏதேனும் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அவை விலகும்.

- Advertisement -