என்னதான் நிறமாக இருந்தாலும் முகத்தில் தழும்புகள் இருந்தால் அந்த முகம் அழகான முகமாக தெரியாது. இதே எந்தவித தழும்புகளும் இல்லாமல் மாநிறமாக இருந்தாலும் அந்த முகம் மிகவும் அழகாக தெரியும். அந்த அளவிற்கு தழும்புகளால் முகத்தின் அழகு கெட்டுவிடுகிறது. இந்த தழும்புகள் பருக்களாலும், அம்மை போன்ற நோய்களாலும் அல்லது வெட்டுக்காயம் இப்படி ஏதாவது ஒரு காரணத்தினால் கூட வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எப்பேர்பட்ட தழும்பாக இருந்தாலும் அந்த தழும்புகளை நீக்கி அழகான மிருதுவான பொலிவான சருமத்தை பெறுவதற்கு வெந்தயத்தை வைத்து எப்படி ஃபேஸ் க்ரீம் தயார் செய்வது என்று இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக வெந்தயத்தை நாம் நம்முடைய தலைக்கு பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும் போது தலையில் இருக்கக்கூடிய தலைமுடிக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது. அதேபோல்தான் நாம் நம்முடைய முகத்திற்கு பயன்படுத்தும் போது அது ஒரு இயற்கையான க்ளென்சிங் போல் செயல்பட்டு நம் முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகளையும் மாசு மருக்களையும் நீக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நம் முகத்தையும் பிரகாசமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இதற்கு நாம் முதலில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். வெந்தயத்தை வறுக்க கூடாது. பொடி செய்த இந்த வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதிக்க ஆரம்பித்த பிறகு ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை அதில் சேர்த்து கெட்டியாக வரும் அளவிற்கு குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
இது கெட்டியாக ஆன பிறகு ஒரு காட்டன் துணியை எடுத்து அதில் இந்த வெந்தயத்தை சேர்த்து ஆளி விதையை எப்படி நம் சாறு பிழிந்து எடுப்போமோ அதேபோல் இந்த வெந்தயத்தில் இருந்தும் சாரை பிழிந்து எடுக்க வேண்டும். எடுத்த இந்த சாரில் நாம் மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இதை இரவில் நாம் படுக்கச் செல்வதற்கு முன் நம்முடைய முகத்திலும் கழுத்திலும் தடவி ஒரு நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். கழுத்தில் தடவும் பொழுது கீழிருந்து மேல்புறமாக தடவ வேண்டும். இவ்வாறு தடவிய பிறகு குறைந்தது ஐந்து நிமிடத்தில் இருந்து அதிகபட்சமாக 15 நிமிடம் வரை அதை அப்படியே விட்டுவிட வேண்டும்.
15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிட்டு படுக்க வேண்டும். இவ்வாறு நாம் தினமும் செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகளும், கரும்புள்ளிகளும், பருக்களும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகத்திற்கு இயற்கையான பொலிவையும் தரக்கூடிய அற்புதமான க்ரீமாக தான் இந்த கிரீன் திகழ்கிறது.
இதையும் படிக்கலாமே: முகப்பொலிவையும், பிரகாசத்தையும் தரும் ஃபேஸ் பேக்
பல மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை நாம் இந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முக அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும்.